பள்ளி மாணவர்களுக்கான கோடைகால கணினி சிறப்பு பயிற்சி

பள்ளி மாணவர்களுக்கான கோடைகால கணினி சிறப்பு பயிற்சி
X

விருதுநகர் மாவட்டம், திருத்தங்கலில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவியர்களுக்கான கோடைகால சிறப்பு கணினி பயிற்சி முகாம் நடைபெற்றது.

இன்றைய தகவல் தொழில்நுட்ப போட்டி உலகில் அடிப்படை கணினி கல்வியறிவு மிக முக்கியமான கருவியாக குறிப்பிடப்படுகிறது

பள்ளி மற்றும் கல்லூரி மாணவியர்களுக்கான கோடைகால சிறப்பு கணினி பயிற்சி முகாம் நடைபெற்றது.

விருதுநகர் மாவட்டம், திருத்தங்கல் கூடம் சேரிட்டி அண்ட் சோசியல் டிரஸ்ட் சார்பாக பள்ளி மற்றும் கல்லூரி மாணவியர் களுக்கு கோடைகால சிறப்பு கணினி பயிற்சி முகாம் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சி, விருதுநகர் காவல்துறை சார்பு ஆய்வாளர் சேகர் தலைமை வகித்தார், ஓய்வு பெற்ற தீயணைப்பு நிலைய அலுவலர் தர்மராஜன் முன்னிலை வகித்தார். கூடம் சேரிட்டி அண்ட் சோசியல் டிரஸ்ட் நிறுவனர் த.சீதாலட்சுமி வரவேற்றார். அதனைத் தொடர்ந்து பள்ளி மற்றும் கல்லூரி மாணவிகளுக்கு லேப்டாப் பேக் மற்றும் பரிசுப் பொருட்கள் வழங்கப்பட்டது .

அடிப்படை கணினி பயிற்சி என்பது ஒவ்வொரு மாணவருக்கும் மற்றும் பணியாளருக்கும் அடிப்படைத் தேவையாகும்.இது பள்ளிகள், கல்லூரிகள் மட்டுமல்ல, தொழில் வல்லுநர்கள் மற்றும் நிறுவனங்களின் பணியாளர்களும் கணினியின் சான்றளிக்கப்பட்ட அடிப்படை பாடத்தை கற்க வேண்டும். இன்றைய தகவல் தொழில்நுட்ப போட்டி உலகிற்கு அடிப்படை கணினி கல்வியறிவு மிக முக்கியமான கருவியாகும், கணினி கல்வியறிவு குறிப்பிடப்படுகிறது.

இன்றைய போட்டி நிறைந்த உலகம், தகவல் தொழில் நுட்பத் துறை மிகவும் வலுவான துறைகளில் ஒன்றாகும். இது கல்வி நோக்கத்திற்காக மட்டுமல்ல, நமது பொருளாதாரத்தின் ஒவ்வொரு துறையிலும் உலகப் பொருளாதாரத்தில் மிகவும் தேவைப்படும் துறையாகும். ஐடி துறையானது உலகப் பொருளாதார வளர்ச்சியின் முக்கிய உந்துதலாக உள்ளது. எல்லாவற்றிற்கும் அடிப்படை கணினி கல்வி அறிவு என்பதால், கோடை காலத்தை பயனுள்ளதாக ஆக்கும் வகையில் தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் கணினி பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story
வாட்ஸ்அப், ஸ்கைப் மோசடிகள்: டிஜிட்டல் அரெஸ்ட் மோசடி விழிப்புணர்வு