திருத்தங்கல் பஸ் நிலையத்தை மீண்டும் செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்: மேயர் தகவல்

திருத்தங்கல் பஸ் நிலையத்தை மீண்டும்  செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்: மேயர் தகவல்
X

திருத்தங்கல் பேருந்து நிலையத்தை மேயர் சங்கீதா இன்பம் தலைமையில் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

திருத்தங்கல் மண்டலத்தில் உள்ள 3, 7, 10, 12, 17 மற்றும் 19 வது வார்டுகளில் ஆய்வு பணிகள் நடைபெற்றது

சிவகாசி அருகே, செயல்படாமல் இருக்கும் பேருந்து நிலையம், மீண்டும் செயல்படுவதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று மேயர் கூறினார்.

விருதுநகர் மாவட்டம், சிவகாசி மாநகராட்சியில், திருத்தங்கல் மண்டலத்தில் 24 வார்டுகள் உள்ளன. திருத்தங்கல் மண்டலத்தில் உள்ள 6 வார்டுகளை மாநகராட்சி மேயர் சங்கீதா இன்பம் ஆய்வு செய்தார். திருத்தங்கல் மண்டலத்தில் உள்ள 3, 7, 10, 12, 17 மற்றும் 19வது வார்டுகளில் ஆய்வு பணிகள் நடைபெற்றது. இந்த வார்டுகள் அனைத்திற்கும் குடிநீர் வசதி, சாலை வசதி, கழிவுநீர் வாறுகால் வசதிகள் ஏற்படுத்துவதற்கான பணிகள் விரைவில் நடைபெறும் என்று அதிகாரிகள் கூறினர். மேலும், சிறுவர் பூங்கா அமைப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ள பறையர்குளம் கண்மாய் பகுதியிலும் ஆய்வு பணிகள் நடைபெற்றது.

பின்னர்,பல கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டு, செயல்படாமல் இருக்கும் திருத்தங்கல் பேருந்து நிலையத்தை மேயர் சங்கீதா இன்பம் தலைமையில் அதிகாரிகள் ஆய்வு செய்தனர். விரைவில், திருத்தங்கல் பேருந்து நிலையம் செயல்படுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று கூறினர்.

ஆய்வின்போது, துணை மேயர் விக்னேஷ்பிரியா, ஆணையாளர் கிருஷ்ணமூர்த்தி, பொறியாளர் ரமேஷ், மாநகராட்சி கவுன்சிலர்கள் குருசாமி, சேதுராமன், நிலானி மணிமாறன், திருப்பதி, சாந்திசரவணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!