விருதுநகர் அருகே லெட்சுமி ஹயக்கீரிவர் சுவாமிக்கு சிறப்பு பூஜை
லெட்சுமி ஹயக்கீரிவர் பூஜை.
அரசு பொதுத்தேர்வு தொடங்கியதை முன்னிட்டு விருதுநகரில் ஸ்ரீஹயக்ரீவர் சுவாமிக்கு புத்தகங்கள், எழுது பொருட்களால் சிறப்பு அலங்காரம் செய்து சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
விருதுநகரில் பிரசித்தி பெற்ற வாலசுப்பிரமணியர் சுவாமி கோவிலில் உள்ள ஸ்ரீஹயக்ரீவர் சுவாமி சந்நிதியில் சிறப்பு யாகங்கள் மற்றும் பூஜைகள் நடைபெற்றது.
தமிழ்நாட்டில் பிளஸ்டூ அரசு பொதுத் தேர்வுகள் நேற்று தொடங்கியுள்ளன. பொதுத் தேர்வுகளில் கலந்து கொண்டு தேர்வு எழுதும் மாணவ, மாணவிகள் சிறப்பான முறையில் தேர்வுகள் எழுதி அதிக மதிப்பெண்கள் பெற வேண்டும் என்பதற்காக, வாலசுப்பிரமணியர் சுவாமி கோவிலில் உள்ள,ஸ்ரீஹயக்ரீவர் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகங்கள், பூஜைகள் நடைபெற்றது.
முன்னதாக, ஸ்ரீஹயக்ரீவர் சந்நிதி மற்றும் சுவாமிக்கு நோட்டு, புத்தகங்கள், பேனா, பென்சில் மற்றும் பள்ளி மாணவர்கள் பயன்படுத்தும் கல்வி பொருட்களைக் கொண்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. அதனைதத் தொடர்ந்து, மாணவர்கள் அதிக மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெறுவதற்காக சிறப்பு யாகங்கள் நடைபெற்றது. இதில், ஏராளமான மாணவ, மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
தமிழகம் முழுவதும் நேற்று 12ம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்குகிறது. இன்று முதல் ஏப்ரல் 3ம் தேதி வரை தேர்வு நடைபெறவுள்ளது. நடப்பாண்டு பொதுத் தேர்வுகளுக்கான கால அட்டவணையின் படி 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மார்ச் 13 இன்று தொடங்கி ஏப்ரல் மாதம் 3ந்தேதி வரை நடக்கிறது. 11ம் வகுப்புக்கு 14ந்தேதி முதல் ஏப்ரல் மாதம் 5ந்தேதி வரையும், 10ம் வகுப்பு மாணவர்களுக்கு ஏப்ரல் 6ந்தேதி முதல் 20 ந்தேதி வரை நடைபெற உள்ளது.
திங்கள்கிழமை தொடங்கிய 12ம் வகுப்பு பொதுத் தேர்வை பள்ளி மற்றும் தனித்தேர்வர்களாக 8 லட்சத்து 51 ஆயிரத்து 303 மாணவ, மாணவிகள் எழுதுகின்றனர். இதற்காக மாநிலம் முழுவதும் 3,225 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அறை கண்காணிப்பாளர்களாக 90 ஆயிரத்து 70 பேரும், பறக்கும் படை உறுப்பினர்களாக 3 ஆயிரத்து 100 பேரும், நிலையான படை உறுப்பினர்களாக 2 ஆயிரத்து 269 பேரும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். தேர்வு காலை 10 மணிக்கு தொடங்கி மதியம் 1:15 மணி வரை நடைபெற உள்ளது.
இதில் முதல் 15 நிமிடங்கள் வினாத்தாள் வாசிக்க வழக்கப்படும். இந்த தேர்வை மாணவர்கள் எந்தவித அச்சமும், பதற்றமும் இல்லாமல் எழுத வேண்டும் என்று பள்ளி கல்வித்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தேர்வு எழுதும் மாணவர்கள் தேர்வில் தேர்ச்சி பெறவும் சிறந்த மதிப்பெண் எடுக்கவும் கோயில்களில் சிறப்பு வழிபாடு மற்றும் யாகங்கள் நடத்தப்பட்டன. இதில், தேர்வுக்கு புறப்பட்டுச் சென்ற மாணவ, மாணவிகள் கோயில்களுக்குச் சென்று வழிபாடு நடத்தி பய பக்தியுடன் தேர்வு எழுதச் சென்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu