சிவகாசி பத்ரகாளியம்மன் ஆலயத்தில் அக்கினிசட்டி எடுத்த பக்தர்கள்

சிவகாசி பத்ரகாளியம்மன் ஆலயத்தில் அக்கினிசட்டி எடுத்த பக்தர்கள்
X

சிவகாசி பத்ரகாளியம்மன்,  ஆலய திருவிழாவில் அக்கினிச்சட்டி எடுக்கும் பக்தர்கள்.

சிவகாசி ஸ்ரீபத்திரகாளியம்மன் கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் அக்கினிச்சட்டி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில், இந்து நாடார்கள் உறவின்முறை மகமைப்பண்டுக்கு சொந்தமான ஸ்ரீபத்திரகாளியம்மன் கோவிலில், சித்திரை திருவிழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது.

திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான அக்கினிச்சட்டி மற்றும் கயறு குத்து திருவிழா இன்று உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இன்று காலை ஸ்ரீபத்திரகாளியம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன. பின்னர் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய ஸ்ரீபத்திரகாளியம்மனுக்கு சிறப்பு பூஜைகள், அர்ச்சனைகள் நடைபெற்றன.

கயறுகுத்து திருவிழாவை முன்னிட்டு சிவகாசி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் வேப்பிலை ஆடையணிந்து, உடலில் கரும்புள்ளி செம்புள்ளி குத்தி, ஓம் சக்தி பராசக்தி என்று கோஷமிட்டு வீதிகளில் வலம் வந்து, பத்திரகாளியம்மன் கோவிலில் அமைக்கப்பட்டுள்ள வேப்பிலை படுக்கையில் உருண்டு நேர்த்திக்கடன் செலுத்தி வருகின்றனர்.

மேலும் நூற்றுக்கணக்கான பக்தர்கள் அக்கினிச்சட்டி எடுத்து வந்து நேர்த்திக்கடன் செலுத்தி வருகின்றனர். இன்று இரவு, கடைக்கோவிலில் இருந்து ஸ்ரீபத்திரகாளியம்மன் பூப்பல்லக்கில் எழுந்தருளி, பத்திரகாளியம்மன் கோவிலுக்கு வருகை தரும் நிகழ்ச்சி அதிவிமரிசையாக நடைபெறும். பூப்பல்லக்கில் எழுந்தருளும் ஸ்ரீபத்திரகாளியம்மன், கோவிலுக்கு வந்து சேர்ந்தவுடன் சுமார் அரை மணி நேரம் கண்கவரும் வாணவேடிக்கை நிகழ்ச்சி சிறப்பாக நடைபெறும்.

வாணவேடிக்கை நிகழ்ச்சியை பார்ப்பதற்காக, பல ஆயிரக்கணக்கான மக்கள் கோவில் வளாகம் மற்றும் கோவிலைச் சுற்றி சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் நின்று வாணவேடிக்கையை பார்த்து ரசிப்பார்கள். திருவிழா நிகழ்ச்சி ஏற்பாடுகளை, சிவகாசி இந்து நாடார்கள் உறவின்முறை மகமைப் பண்டு தேவஸ்தான நிர்வாகிகள் சிறப்பாக செய்து வருகின்றனர்.

Tags

Next Story
பொங்கல் பண்டிகை முடிவில் சின்ன வெங்காயத்தின் விலை கிலோ ரூ.30..!