சிவகாசி மேயர் பிறந்த நாள்: நலிந்தோருக்கு நலத்திட்ட நலத்திட்ட உதவி வழங்கல்

சிவகாசி மேயர் பிறந்த நாள்: நலிந்தோருக்கு நலத்திட்ட  நலத்திட்ட உதவி வழங்கல்
X
Sivakasi Mayors Birthday

சிவகாசி மேயர் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு குழந்தைகள் காப்பகத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

விருதுநகர் மாவட்டம் சிவகாசி மாநகராட்சி மேயர் சங்கீதா இன்பம் பிறந்தநாளை முன்னிட்டு, குழந்தைகள் காப்பகம் மற்றும் உண்டு உறைவிடப்பள்ளிக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. மேயர் சங்கீதா இன்பத்தின் பிறந்த நாளை முன்னிட்டு திமுக கட்சியினர், தோழமை கட்சியினர், மாமன்ற கவுன்சிலர்கள் மற்றும் அதிகாரிகள் மேயருக்கு வாழ்த்துகள் தெரிவித்தனர். ஆதரவற்றோர்களுக்கு வேஷ்டி, சேலைகளை மேயர் சங்கீதா இன்பம் வழங்கினார்.

சிவகாசி அருகேயுள்ள வெம்பக்கோட்டை சிபியோ குழந்தைகள் காப்பகம் மற்றும் உண்டு உறைவிடப்பள்ளிக்குச் சென்ற மேயர் சங்கீதா இன்பம், அங்குள்ள குழந்தைகளுக்கு பரிசுப் பொருட்கள், விளையாட்டு உபகரணங்கள் மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். பின்னர் அங்கிருந்த குழந்தைகளுக்கு, மேயர் சங்கீதா இன்பம் உணவு வழங்கியதுடன், அவர்களுடன் அமர்ந்து உணவருந்தினார். குழந்தைகள் மகிழ்ச்சியுடன், சிவகாசி மேயருக்கு வாழ்த்துகள் தெரிவித்தனர்.

Tags

Next Story
ai tools for education