சிவகாசி தீயணைப்பு நிலையத்தில் சட்டமன்ற உறுதிமொழிக் குழுவினர் ஆய்வு

சிவகாசி தீயணைப்பு நிலையத்தில் சட்டமன்ற உறுதிமொழிக் குழுவினர் ஆய்வு
X

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் உள்ள தீயணைப்பு நிலையத்தில் சட்டமன்ற உறுதிமொழி குழுவினர்  ஆய்வு செய்தனர்.

சிவகாசி தீயணைப்பு நிலையத்தில் தமிழ்நாடு சட்டமன்ற உறுதிமொழிக் குழுவினர் ஆய்வு செய்தனர்.

விருதுநகர் மாவட்டத்தில் வளர்ச்சிப் பணிகள் குறித்து, தமிழ்நாடு சட்டப்பேரவை உறுதிமொழி குழுவினர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து வருகின்றனர்.

சட்டப்பேரவை உறுதிமொழி குழு தலைவர் பண்ருட்டி தொகுதி எம்.எல்.ஏ. வேல்முருகன் தலைமையில், சேலம் மேற்கு தொகுதி எம்.எல்.ஏ. அருள்செல்வன்,பெருந்துறை தொகுதி எம்.எல்.ஏ. ஜெயக்குமார், நாங்குநேரி தொகுதி எம்.எல்.ஏ. ரூபிமனோகரன், விருதுநகர் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் மற்றும் அதிகாரிகள் ஆய்வு பணியில் கலந்து கொண்டனர்.

சிவகாசி தீயணைப்பு நிலையத்திற்கு வந்த ஆய்வு குழுவினர், தீயணைப்பு நிலையத்தில் உள்ள கருவிகள், அவற்றின் செயல்பாட்டு திறன், மேலும் தீயணைப்பு நிலையத்திற்கு தேவையான அத்தியாவசிய நவீன கருவிகள் குறித்து தீயணைப்பு நிலைய அதிகாரி வெங்கடேசன் மற்றும் தீயணைப்பு வீரர்களிடம் கேட்டறிந்தனர்.

இதனையடுத்து விருதுநகர் மாவட்டத்தில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சித்திட்டப் பணிகளையும், சட்டப்பேரவை குழுவினர் பார்வையிட்டனர். நிகழ்ச்சியில் சிவகாசி தொகுதி எம்.எல்.ஏ. அசோகன், மாநகராட்சி ஆணையாளர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

சட்டப்பரேவை குழுவினர் ஆய்வு பணியில் இருந்த போது அவர்களிடம் பொதுமக்கள் கோரிக்கைகள் தொடர்பான மனுக்களையும் அளித்தனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!