சிவகாசி பத்ரகாளியம்மன் ஆலய சித்திரை திருவிழா

சிவகாசி பத்ரகாளியம்மன் ஆலய  சித்திரை திருவிழா
X

சிவகாசி ஸ்ரீபத்திரகாளியம்மன் 'தவக்கோலம்' காட்சியில் எழுந்தருளினார்

ஸ்ரீபத்திரகாளியம்மன், மாரியம்மன் கோவில் திடலில் கழுவேற்று லீலை நிகழ்ச்சிகள் சிறப்பாக நடந்தது.

சிவகாசி ஸ்ரீபத்திரகாளியம்மன் 'தவக்கோலம்' காட்சியில் எழுந்தருளினார்.....

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில், இந்து நாடார்கள் உறவின்முறை மகமைப்பண்டுக்கு சொந்தமான ஸ்ரீபத்திரகாளியம்மன் கோவில் சித்திரை திருவிழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது. நேற்று இரவு 6ம் திருவிழாவை முன்னிட்டு, நவதானிய வர்த்தக மண்டபத்தில் எழுந்தருளிய ஸ்ரீபத்திரகாளியம்மனை பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

இதனையடுத்து, ஸ்ரீபத்திரகாளியம்மன் வெள்ளி ரிஷப வாகனத்தில் எழுந்தருளி ரதவீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுத்தார். இதனை தொடர்ந்து இன்று அதிகாலையில், சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய ஸ்ரீபத்திரகாளியம்மன், மாரியம்மன் கோவில் திடலில் கழுவேற்று லீலை நிகழ்ச்சிகள் சிறப்பாக நடந்தது.

பின்னர், ஸ்ரீபத்திரகாளியம்மன் 'தவக்கோலத்தில்' எழுந்தருளி வீதியுலாவாக வந்து கடைக்கோவிலில் வெள்ளி ஊஞ்சலில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி கொடுத்து வருகிறார். இன்று இரவு, ஸ்ரீபத்திரகாளியம்மன் பூப்பல்லக்கில் 'சயன திருக்கோலத்தில்' சீர்வரிசைகள் பின்தொடர எழுந்தருளி ரதவீதிகளில் வலம் வரும் நிகழ்ச்சியும், இதனையடுத்து ஸ்ரீபத்திரகாளியம்மன் யானை வாகனத்தில் எழுந்தருளி ரதவீதிகளில் வலம்வரும் நிகழ்ச்சியும் சிறப்பாக நடைபெற உள்ளது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை இந்து நாடார்கள் உறவின்முறை மகமைப்பண்டு தேஸ்தான நிர்வாகிகள் சிறப்பாக செய்து வருகின்றனர்.

Tags

Next Story
வாட்ஸ்அப், ஸ்கைப் மோசடிகள்: டிஜிட்டல் அரெஸ்ட் மோசடி விழிப்புணர்வு