மது பாட்டில் கடத்தி வந்த இருவர் கைது

மது பாட்டில் கடத்தி வந்த இருவர் கைது
X
சிவகாசியில் மது பாட்டில்கள் கடத்தி வந்த இருவர் கைது

சாத்தூரில், வெளிமாநில மது பாட்டில்கள் கடத்தி வந்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் பகுதியில், ரயில் மூலமாக வெளிமாநில மது பாட்டில்கள் கடத்தி கொண்டு வரப்படுவதாக, இருக்கன்குடி போலீசாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் இருக்கன்குடி செல்லும் சாலையில் உள்ள ரயில்வே கேட் பகுதியில், போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

அப்போது சந்தேகப்படும் வகையில், பைகளுடன் சுற்றித்திரிந்த 2 பேரை பிடித்து போலீசார் சோதனை செய்தனர். அவர்கள் வைத்திருந்த பையில் 90 வெளிமாநில மது பாட்டில்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. போலீசார் விசாரணையில் பிடிபட்ட இருவரும் நத்தத்துப்பட்டி பகுதியைச் சேர்ந்த முருகன் (30), பால்பாண்டி (25) என்பதும், இவர்கள் இருவரும் வெளிமாநில மது பாட்டில்களை ரயில் மூலமாக கடத்திக்கொண்டு வந்து, கூடுதல் விலைக்கு விற்று வந்தது தெரிந்தது.

இருக்கன்குடி போலீசார் மது கடத்தலில் ஈடுபட்ட 2 பேரையும் கைது செய்து, அவர்களிடமிருந்து 90 மது பாட்டில்களை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story
அதிமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட மக்கள் நலத் திட்டங்களை விளக்கி ராசிபுரத்தில் பிரசாரம்-முன்னாள் அமைச்சா் பி.தங்கமணி