உடல் நலம் வேண்டி பள்ளி மாணவிகள் விழிப்புணர்வு சைக்கிள் பேரணி

உடல் நலம் வேண்டி பள்ளி மாணவிகள்  விழிப்புணர்வு சைக்கிள் பேரணி
X

சிவகாசி அருகே பள்ளி மாணவர்கள் சார்பில் உடல்நலம் காக்கும் விழிப்புணர்வு சைக்கிள் பயணம் நடைபெற்றது.

சிவகாசி அருகே பள்ளி மாணவர்கள் சார்பில் உடல் நலம் காக்கும் விழிப்புணர்வு சைக்கிள் பயணம் நடைபெற்றது

சிவகாசி அருகே பள்ளி மாணவர்கள் சார்பில் உடல்நலம் காக்கும் விழிப்புணர்வு சைக்கிள் பயணம் நடைபெற்றது.

விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகேயுள்ள பேர்நாயக்கன்பட்டி பகுதியில் உள்ள, ஹயக்ரீவாஸ் சர்வதேச பள்ளி மாணவர்கள் கலந்து கொண்ட, உலக சைக்கிள் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு சைக்கிள் ஊர்வலம் நடைபெற்றது.

வெம்பக்கோட்டை காவல்நிலைய ஆய்வாளர் நம்பிராஜன் விழிப்புணர்வு சைக்கிள் ஊர்வலத்தை கொடியசைத்து துவக்கி வைத்தார். முன்னதாக நிகழ்ச்சியில் அவர் பேசும்போது, ஒவ்வொரு தனி மனிதர்களின் உடல் ஆரோக்கியம் மிகவும் அவசியமானதாகும். நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம். உடல் ஆராக்கியத்திற்காக உடற்பயிற்சி அவசியம். உடற்பயிற்சியில் இலகுவாகவும், பயனுள்ளதாகவும் இருப்பதில் முதன்மையானது சைக்கிள்கள் தான்.

பரபரப்பான தினசரி வாழ்க்கையில் இருசக்கர வாகனப் பயன்பாடுகள் அதிகரித்துள்ள நிலையில் சைக்கிள்கள் பயன்பாடு மிகவும் குறைந்துள்ளது. தினமும் சுமார் ஒரு மணி நேரமாவது சைக்கிள் ஓட்ட வேண்டும். காலை அல்லது மாலை நேரங்களில் சற்று ஓய்வு கிடைக்கும் நேரங்களில் சின்னசின்ன பணிகளுக்கு சைக்கிள்களில் சென்றாலே உடல் ஆரோக்கியமாக இருக்கும்.

எனவே அனைவரும் உடல் ஆரோக்கியத்தின் மீது சற்று அக்கறையுடன் சைக்கிள் ஓட்டுவதை கண்டிப்பாக செய்ய வேண்டும் என்று பேசினார். இதனையடுத்து பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் என நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் உடல்நலம் பேணும் வாசகங்கள் அடங்கிய பதாகைகளுடன் விழிப்புணர்வு சைக்கிள் ஊர்வலம் சென்றனர். நிகழ்ச்சியில் சிவகாசி மாநகராட்சி கவுன்சிலர் ராஜேஷ், பள்ளி நிர்வாகி ஜெயகுமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
ஈரோடு பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்: கூகுள் நிறுவனத்தின் உதவியுடன் குற்றவாளியை கண்டறியும் முயற்சி