இல்லம் தேடிக் கல்வி மைய தன்னார்வலர்களுக்கு புத்தாக்க பயிற்சி முகாம்
ஸ்ரீவில்லிபுத்தூரில் இல்லம் தேடிக் கல்வி உயர் தொடக்க நிலை தன்னார்வலர்களுக்காக கிருஷ்ணன் கோயிலில் நடைபெற்ற புத்தாக்க பயிற்சி முகாம்
ஸ்ரீவில்லிபுத்தூரில் இல்லம் தேடிக் கல்வி உயர் தொடக்க நிலை தன்னார்வலர்களுக்கான 5-ம் தொகுதி பயிற்சி புத்தகத்திற்கான பயிற்சி கிருஷ்ணன்கோவிலில் உள்ள வட்டார வளமையத்தில் நடைபெற்றது.
பயிற்சியைத் தொடங்கி வைத்து வட்டாரக் கல்வி அலுவலர் சீனிவாசன் பேசியதாவது: பள்ளிக் கல்வித் துறை, அரசு தமிழ்நாடு இல்லம் தேடி கல்வி திட்டம் 2022 என்ற புதிய திட்டத்தை தமிழ்நாடு அறிமுகப்படுத்தியுள்ளது. தமிழ்நாட்டின் ஆங்கிலத் திட்டத்தில் வீட்டு வாசலில் கல்வி 1 முதல் 8 ஆம் வகுப்பு வரையிலான குழந்தைகளின் கற்றல் இடைவெளியைக் குறைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
தமிழ்நாடு இல்லம் தேடி கல்வி திட்டத்தின் ஒரு பகுதியாக, தன்னார்வலர்கள் தினமும் மாலை 5 மணி முதல் 7 மணி வரை பள்ளி நேரம் முடிந்ததும் மாணவர்களின் வீடுகளுக்கு அருகில் வகுப்புகள் எடுப்பார்கள். தன்னார்வ மாணவர் விகிதம் 1:20 ஆக இருக்கும்.
12ஆம் வகுப்பு வரை படித்த அனைவரும் 1 முதல் 5ஆம் வகுப்பு மாணவர்களுக்கும், பட்டம் பெற்றவர்கள் நடுநிலைப் பள்ளி மாணவர்களுக்கும் கற்பிக்கலாம். உள்ளூர் தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் உறுப்பினர்களைத் தவிர, பெற்றோர்கள் வந்து தங்களைத் தொண்டர்களாகப் பதிவு செய்து கொள்கின்றனர். ஒவ்வொரு குழு மாணவர்களுக்கும் வாரம் முழுவதும் சுமார் ஆறு மணிநேர வகுப்புகள் நடைபெறும்.
கொரோனா பெருந்தொற்று பொது முடக்கத்தால் ஏற்பட்ட பள்ளி மாணவர்களின் கற்றல் இடைவெளி மற்றும் இழப்புகளை சரிசெய்ய இல்லம் தேடிக் கல்வி என்ற திட்டத்தை தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருகிறது. இதன்கீழ், பள்ளி நேரங்களுக்குப் பிறகு, தினசரி 1 முதல் 1.30 மணி நேரம் வரை ஆசிரியர் மற்றும் தன்னார்வலர்கள் கொண்டு கற்றல் செயல்பாடுகள் நடைபெற்று வருகின்றன.
மாநிலத்தின் கிட்டத்தட்ட 92 ஆயிரத்துக்கும் அதிகமான குடியிருப்புகளில் உள்ள 34,05,856 அரசுப்பள்ளி மாணவர்கள் கொரோனா பெருந்தொற்றால் சுமார் 2 ஆண்டுகள் படிப்பை இழந்து நின்ற தொடக்க மற்றும் உயர் தொடக்க நிலை மாணவர்களுக்கு இத் திட்டம் ஒரு வரப்பிரசாதம். மாணவர்களின் கற்றல் இழப்புகளை ஈடு செய்யவும், அவர்களை பள்ளியுடன் இணைக்கும் பாலமாகவும் இத்திட்டம் செயல்படுகிறது.
இல்லம் தேடிக் கல்வி மையங்களில் மாணவர்கள் மாலை நேரங்களில் இத் திட்டத்தின் கீழ் கற்று வருகிறார்கள். இவர்களுக்கு தன்னார்வலர்கள் கல்வி மற்றும் கல்வி சார்ந்த பல்வேறு நிகழ்ச்சிகளைக் கற்றுக் கொடுத்து வருகிறார்கள்.குறிப்பாக , கிராமப் புறங்களில் இந்த மையங்கள் கிராமப்புற மாணவர்களுக்கு நல் வழிகாட்டும் மற்றும் பள்ளியில் கற்ற பாடங்களை நினைவுபடுத்தி, தொடர்ந்து கற்றலில் ஆர்வத்தை தூண்டும் வகையிலும் செயல்பட்டு வருகிறது.
தன்னார்வலர்கள் வாரத்திற்கு குறைந்தது ஆறு மணி நேரம் குழந்தைகளுடன் செலவிட தயாராக இருக்க வேண்டும் (அல்லது) பகுதி நேரமாகவும் தன்னார்வலராக இருக்கலாம்..கண்டிப்பாக குழந்தைகளுடன் உரையாட தமிழ் தெரிந்திருக்க வேண்டும்.தமிழ், ஆங்கிலம், மற்றும் கணிதம் கற்றுத்தர வேண்டும். (பயிற்சிகளும் உபகரணங்களும் வழங்கப்படும்)யார் நிர்பந்தமும் இன்றி தன்முனைப்பாக பங்கேற்க வேண்டும்.குறைந்தபட்சம் 17 வயது நிரம்பி இருத்தல் அவசியம் என்றார்.
பயிற்சியின் கருத்தாளர்களாக கிறிஸ்டி தங்கநாயகம், ஜஸ்டின் தங்கராஜ், வரமணி அப்பன்ராஜ், பிரைட்டி சிங் ஆகியோர் செயல்பட்டனர். பயிற்சியில் 110 தன்னார்வலர்கள் கலந்து கொண்டனர். இவர்களுக்கு பயிற்சி புத்தகம் மற்றும் கற்பித்தல் உபகரணங்கள் வழங்கப்பட்டது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu