ராஜபாளையம் அருகே ரயில்வே மேம்பாலம் பணி: அமைச்சர் ஆய்வு

ராஜபாளையம் அருகே ரயில்வே மேம்பாலம் பணி: அமைச்சர் ஆய்வு
X

விருதுநகர் அருகே ரயில்வே மேம்பால பணியை  அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர். ராமச்சந்திரன் ஆய்வு மேற்கொண்டார்

லஞ்ச ஒழிப்பு துறை சோதனை நடைபெற்றால் தான் அதிகாரிகளுக்கு பயம் இருக்கும். மக்களை அலைக்கழிக்ககூடாது என்பதே முதல்வரின் எண்ணம்

ராஜபாளையம் சத்திரப்பட்டி சாலையில் கடந்த ஐந்து வருடங்களாக நடைபெற்று வரும் ரயில்வே மேம்பால பணிகளை, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே. கே. எஸ். எஸ். ஆர். ராமச்சந்திரன் ஆய்வு மேற்கொண்டார்.

ரயில்வே மேம்பாலம் பணிகளை ஆய்வு செய்த பின்னர், அமைச்சர் ராமச்சந்திரன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:கொரோனா பெருந்தொற்று காலத்தில் ரயில்வே மேம்பால பணிகள் பாதிக்கப்பட்டது - தற்போது, பணிகள் துரிதமாக நடைபெற்று வருவதால் ,அடுத்த மாத இறுதிக்குள் மேம்பாலம் திறக்கப்படும்..மேம்பாலத்தின் இருபுறமும் அமைக்கப்பட உள்ள சாலை பணிகள் அடுத்த இரண்டு மாதத்திற்குள் நிறைவு பெறும்.இதேபோல், தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்ட பணிகள், பாதாள சாக்கடை திட்ட பணிகள் 90 விழுக்காடுக்கு மேல் நிறைவு பெற்றுள்ளதால், விரைவில் பயன்பாட்டுக்கு வரும்.

புதிய பேருந்து நிலையத்தில் இருந்து தென்காசி சாலை வரை இணைப்பு சாலை பணிகளும் விரைவில் தொடங்கப்படும்.ராஜபாளையம் மட்டுமின்றி சத்தியமங்கலம், பொள்ளாச்சி ஆகிய 3 நகராட்சிகளிலும் சொத்து வரி அதிகமாக உயர்த்தப்பட்டுள்ளது - வரியை குறைக்க கோரி நகராட்சி கூட்டத்தில் தீர்மானம் இயற்றப்பட்டுள்ளது - விரைவில் வரி குறைக்கப்படும்.

லஞ்ச ஒழிப்பு துறை சோதனை நடைபெற்றால்தான், அதிகாரிகளுக்கு பயம் இருக்கும். பொதுமக்களை அலைக்கழிக்க கூடாது என்பதுதான் முதல்வரின் எண்ணம். மக்களிடம் லஞ்சம் பெற வேண்டும் என்பதற்காகவே அவர்கள் அலைக்கழிக்கப்படுகிறார்கள் - லஞ்சத்தை ஒழிக்க வேண்டும். வைரஸ் காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டால் அதற்கான முடிவுகளை முதல்வர் எடுப்பார் என்றார்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!