சிவகாசி அருகே பட்டாசு ஆலை விபத்தில் இறந்த குடும்பங்களுக்கு, காங்கிரஸ் எம்.பி. ராகுல் இரங்கல்.
சிவகாசி அருகே, பட்டாசுக் கடை விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு, காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி இரங்கல் தெரிவித்து பதிவிட்டுள்ளார்.
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகேயுள்ள ரெங்கபாளையத்தில், பட்டாசுக் கடையில் ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில் 12 பெண்கள் உட்பட 13 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
மேலும் கிச்சநாயக்கன்பட்டி பகுதியில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட விபத்தில் தொழிலாளி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
ஒரே நாளில் இரு வேறு விபத்துகளில் 14 பேர் உயிரிழந்த சம்பவம், தமிழகம் மட்டுமல்லாமல் நாடு முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் இந்த சம்பவத்திற்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, சிவகாசி பட்டாசு விபத்து குறித்து தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் இரங்கல் செய்தி விடுத்துள்ளார்.
அதில், தமிழ்நாடு மாநிலத்தில், விருதுநகர் மாவட்டத்தில் இரண்டு பட்டாசு விபத்துகளில் பலர் உயிரிழந்த செய்தி வருத்தமளிக்கிறது. என் எண்ணங்கள் துயருற்ற குடும்பங்களுடன் உள்ளன. காயமடைந்தவர்கள் சிறந்த சிகிச்சை பெற்று விரைவில் குணமடைவார்கள் என நம்புகிறேன் என்று ராகுல்காந்தி, தனது வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu