காரியாபட்டியில் நடுவர் நீதிமன்ற கட்டிடம்: முதன்மை நீதிபதி ஆய்வு

காரியாபட்டியில் நடுவர் நீதிமன்ற கட்டிடம்: முதன்மை நீதிபதி ஆய்வு
X

புதிய நீதிமன்ற கட்டடத்தை ஆய்வு மேற்கொண்ட முதன்மை நீதிபதி 

காரியாபட்டியில் 26ம் தேதி திறப்புவிழா நடைபெறவுள்ள புதிய நீதித்துறை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தை மாவட்ட முதன்மை நீதிபதி ஆய்வு செய்தார்

காரியாபட்டியில் நீதிமன்றம் திறப்பு விழாவுக்கான இறுதி கட்ட பணிகளை மாவட்ட முதன்மை நீதிபதி ஆய்வு செ ய்தார். விருதுநகர் மாவட்டம், காரியா பட்டியில் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் மற்றும் மாவட்ட உரிமையியல் நீதிமன்றம் அமைக்கப் பட்டுள்ளது. இந்த நீதிமன்ற கட்டிட பணிகள் முழுமையாக முடிக்கப்பட்டு திறப்பு விழாவுக்கான ஏற்பாடுகளை, நீதித்துறையினர் செய்து வருகின்றனர்.

காரியாபட்டி கே. செவல்பட்டியில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள நீதிமன்றத்தை மாவட்ட முதன்மை நீதிபதி ஜெயகுமார் பார்வையிட்டு ஆய்வு செய்தார். வரும் 26ந்தேதி காரியாபட்டி நீதிமன்ற கட்டிடம் திறப்பு விழா நடத்த ஏற்பாடு செ ய்யப் பட்டுள்ளதால் , அதற்கான பணிகளை விரைவாக செய்ய நீதித்துறை அலுவலர்களுக்கு, மாவட்ட முதன்மை நீதிபதி ஜெயக்குமார் உத்தரவு பிறப்பித்தார்.

ஆய்வின் போது, . .அருப்புக் கோட்டை வழக்கறிஞர்கள் சங்கத்தலைவர் ராம்குமார், செயலாளர் ராஜேந்திரன், காரியாபட்டி வழக்கறிஞர்கள் சங்கத்தலைவர் அக்னி தேவர், செயலாளர் கவியரசன், துணைச் செயலாளர் செந்தில் குமார் வக்கீல்கள் ஜெயபிரகாஷ், ரமேஷ், சபரிகிரி வாசன், ஜெகன், மோகன், முத்துராஜா, பாண்டியராஜன் உள்படபலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
பவானிசாகர் அணையில் நீர்மட்டம் குறைவு..! விவசாயிகளின் கவலை அதிகரிப்பு..!