ஒபிஎஸ்க்கு ஆதரவாக போஸ்டர்: சிவகாசியில் பரபரப்பு

ஒபிஎஸ்க்கு ஆதரவாக போஸ்டர்: சிவகாசியில் பரபரப்பு
X

சிவகாசியில் ஓபிஎஸ்க்கு ஆதரவாக ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்.

சிவகாசி பகுதியில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ்-க்கு ஆதரவு தெரிவித்து போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருப்பதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சிவகாசி பகுதியில், முன்னாள் முதல்வர், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் -க்கு ஆதரவு தெரிவித்து போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருப்பதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

விருதுநகர் மாவட்டம் சிவகாசியில், அதிமுக மேற்கு மாவட்ட நிர்வாகிகள் சார்பில் முன்னாள் முதல்வரும், அதிமுக கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வத்திற்கு ஆதரவு தெரிவித்து போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சிவகாசி மற்றும் திருத்தங்கல் பகுதிகளில் ஓபிஎஸ் ஆதரவு போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. விருதுநகர் மேற்கு மாவட்ட மாணவரணி செயலாளர் கதிரவன் மற்றும் இலக்கிய அணி செயலாளர் தெய்வம் என்ற நிர்வாகிகளின் பெயரில், 'தொண்டர்கள் விரும்பும் ஒற்றை தலைமை' ஓபிஎஸ் தலைமையே என்ற போஸ்டரும், 'தாய் இட்ட கட்டளையினை தப்பாது செய்து முடிக்கும், தமிழகத்திற்கு தாய் தந்த தலைமகனே தலைமையேற்க வா என்ற வாசகங்களுடனும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது.

அதிமுக மேற்கு மாவட்ட செயலாளராக முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி இருந்து வருகிறார். அவர் வசிக்கும் ஊரில் இந்த பரபரப்பு போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருப்பதால், முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜியின் ஆதரவு ஓபிஎஸ் - க்குத் தான் என்று அதிமுக தொண்டர்கள் பேசி வருகின்றனர். நாளுக்கு நாள் அதிமுக தலைமை குறித்து வரும் செய்திகள், அதிமுக தொண்டர்களிடம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!