காரியாபட்டியில் தூய்மைக்கான மக்கள் இயக்க விழிப்புணர்வு பிரச்சாரம்

காரியாபட்டியில் தூய்மைக்கான மக்கள் இயக்க விழிப்புணர்வு பிரச்சாரம்
X

காரியாபட்டியில், தூய்மைக்கான மக்கள் இயக்க விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்றது. 

காரியாபட்டியில் தூய்மைக்கான மக்கள் இயக்க விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்றது.

காரியாபட்டியில் நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்க விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்றது.

காரியாபட்டியில், தூய்மைக்கான மக்கள் இயக்க விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்றது. விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி பேரூராட்சி சார்பாக தமிழக முதல்வரின் அறிவிப்பின் பேரில் நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கம் விழிப்புணர்வு பேரணி பிரச்சாரம், மற்றும், தீவிர துப்பரவு பணிகள் நடைபெற்றது. நிகழ்ச்சியில், நம் நகரத்தை தூய்மையாகயும் பிளாஸ்டிக்கழிவுகள் இல்லாத நகரமாக மாற்றுவோம் என்று பேரூராட்சித் தலைவர் செந்தில் தலைமையிலும், செயல் அலுவலர் ஸ்ரீ.ரவிக்குமார் முன்னிலையில் கவுன்சிலர்கள் மற்றும் தூயமை பணியாளர்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

மேலும், பாண்டியன் நகர் பகுதியில் விழிப்புணர்வு பிரச்சார பேரணி துவங்கப்பட்டது. அதைத்தொடர்ந்து, வீடுவீடாக சென்று குப்பைகளை தரம் பிரித்து வாங்குதல், பொதுகழிப்பறை மற்றும் சமுதாய கழிப்பறைகளை சுத்தம் செய்தல், பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றுதல் போன்ற பணிகள் நடைபெற்றன. நமது நகரத்தை சுத்தமாக வைக்க வேண்டும் என்ற விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்பட்டது. பிளாஸ்டிக் பைகளுக்கு பதிலாக மஞ்சள் பைகள் பயன்படுத்த வலியுறுத்தி வியாபாரிகள் , பொதுமக்களுக்கு மஞ்சள் பைகள் வழங்கப்பட்டது. காரியாபட்டி அரசு மருத்துவமனை வளாகம் சுத்தம் செய்யப்பட்டது. நிகழ்ச்சியில், பேரூராட்சி துணைத்தலைவர் ரூபி சந்தோசம் . கவுன்சிலர்கள் சங்கரேஸ்வரன் | சரஸ்வதி, சத்தியபாமா தீபா நாகஜோதி முத்துக்குமார், உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!