சிவகாசி வங்கியில் இணையதள சேவை முடக்கம் மக்கள் அவதி

சிவகாசி  வங்கியில் இணையதள சேவை முடக்கம் மக்கள் அவதி
X
சிவகாசி இந்தியன் வங்கியில் இணையதள சேவை முடங்கியதால் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர்.

சிவகாசி சாத்தூர் சாலையில் உள்ள இந்தியன் வங்கியில். இணையதள வசதி இல்லாமல் முடங்கியதால் இந்த வங்கியின் பணம் செலுத்தும், எடுக்கும் இயந்திரங்களும் ஒரு மாதமாக செயல்படாமல் உள்ளது.

வங்கி மூலமாக பணம் செலுத்த, எடுக்க வரும் மக்களை வங்கி ஊழியர்கள் முறையாக வழிநடத்துவதில்லை என குற்றம் சாட்டும் பொதுமக்கள் நீண்ட நேரம் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் கவலை தெரிவிக்கின்றனர்.

வங்கி நிர்வாகம் உடனடியாக இணையதள சேவையை பெற்று மக்களுக்கு தீர்வு காண வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!