சட்ட விரோதமாக பட்டாசு தயாரித்த 4 பேர் கைது

சட்ட விரோதமாக பட்டாசு தயாரித்த 4 பேர் கைது
X
விருதுநகர் சுற்றுவட்டாரப் பகுதியில் சட்ட விரோதமாக பட்டாசு தயாரிப்பில் ஈடுபட்டு வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது

விருதுநகர் அருகே, சட்ட விரோதமாக பட்டாசு தயாரித்த 4 பேர் கைது செய்யப்பட்டனர்

விருதுநகர் சுற்றுவட்டாரப் பகுதியில் சட்ட விரோதமாக சிலர், பட்டாசுகள் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் வச்சக்காரப்பட்டி காவல்நிலைய போலீசார், கன்னிசேரி - நாரணாபுரம் சாலையில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு கண்காணித்து வந்தனர்.

நாரணாபுரம் அருகேயுள்ள அய்யனார் கோவில் அருகே சிலர் சட்ட விரோதமாக பட்டாசுகள் தயாரித்துக் கொண்டிருந்ததை போலீசார் கண்டுபிடித்தனர். ஆட்கள் நடமாட்டம் இல்லாத பகுதியில் செட் அமைத்து சட்ட விரோதமாக பட்டாசுகள், பேன்சி ரக வெடிகள் தயாரித்துக் கொண்டிருந்த வாடியூர் பகுதியைச் சேர்ந்த கருப்பசாமி (36), திருத்தங்கல் பகுதியைச் சேர்ந்த கருத்தபாண்டி (48), ஓ.கோவில்பட்டி பகுதியைச் சேர்ந்த மாரிச்சாமி (23), தர்மர் (32) ஆகிய 4 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்கள் தயாரித்து வைத்திருந்த சுமார் ஒரு லட்சம் ரூபாய் மதிப்புள்ள பட்டாசுகள் மற்றும் பேன்சி ரக வெடிகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!