சிவகாசி ஸ்ரீமாரியம்மன் கோவில் பங்குனி பொங்கல் விழா: அம்மன் பவனி

சிவகாசி ஸ்ரீமாரியம்மன் கோவில் பங்குனி பொங்கல் விழா: அம்மன் பவனி
X

சிவகாசியில் ஸ்ரீ மாரியம்மன் கோவில் பங்குனி விழாவில், வேதாள வாகனத்தில் எழுந்தருளிய அம்மன்.

சிவகாசியில், ஸ்ரீமாரியம்மன் கோவில் பங்குனி பொங்கல் விழாவை முன்னிட்டு, அம்மன் வீதியுலாவை பக்தர்கள் தரிசித்து வழிபட்டனர்.

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில், இந்து நாடார்கள் உறவின்முறை மகமை பண்டுக்கு சொந்தமான ஸ்ரீமாரியம்மன் கோவில் பங்குனிப் பொங்கல் திருவிழா விமரிசையாக நடைபெற்று வருகிறது. தினமும் அதிகாலையில் கோவில் நடை திறக்கப்பட்டு, பெண்கள் மற்றும் சிறு குழந்தைகள் மட்டும் கலந்து கொள்ளும் அம்மன் அபிஷேகம் நிகழ்ச்சி சிறப்பாக நடந்து வருகிறது.

நேற்று இரவு ஸ்ரீமாரியம்மன் சிறப்பாக அலங்கரிக்கப்பட்டு, வேதாள வாகனத்தில் எழுந்தருளி நகரின் நான்கு ரதவீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுத்தார். அம்மன் வீதியுலா நிகழ்ச்சி வாண வேடிக்கைகளுடன் சிறப்பாக நடைபெற்றது. சிறப்பு வாகனத்தில் எழுந்தருளிய ஸ்ரீமாரியம்மனை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை இந்து நாடார்கள் உறவின்முறை மகமைபண்டு தேவஸ்தான நிர்வாகிகள் சிறப்பாக செய்திருந்தனர்.

Tags

Next Story
ai in future agriculture