/* */

விருதுநகரில் சட்டவிரோத பட்டாசு உற்பத்தியை தடுக்க குழுக்கள் அமைப்பு: ஆட்சியர் தகவல்

விதிமுறைகளை மீறி சட்ட விரோதமாக பட்டாசு தயாரிப்பில் ஈடுபடுபவர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை

HIGHLIGHTS

விருதுநகரில் சட்டவிரோத பட்டாசு உற்பத்தியை தடுக்க குழுக்கள் அமைப்பு: ஆட்சியர் தகவல்
X

 விருதுநகர் மாவட்ட ஆட்சியர் மேகநாதரெட்டி

விருதுநகர் மாவட்டத்தில், சட்ட விரோத பட்டாசு உற்பத்தியை தடுக்க 4 ஆய்வு குழு அமைக்கப்பட்டுள்ளது.

விருதுநகர் மாவட்டத்தில் செயல்படும் பட்டாசு ஆலைகளில், சரவெடிகள் தயாரிப்பதை தடுக்கவும், தடை செய்யப்பட் டுள்ள பேரியம் நைட்ரேட் உபயோகிப்பதை கண்காணித்து தடுப்பதற்காகவும் ஆய்வு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் மேகநாதரெட்டி தெரிவித்துள்ளார்.

விருதுநகர் மாவட்டத்தின் பிரதானமான தொழிலாக பட்டாசு தயாரிக்கும் தொழில் இருந்து வருகிறது. இந்த நிலையில் சுற்றுச்சூழல் மாசு ஏற்படுவதை தடுப்பதற்காக, பட்டாசு தயாரிக்கும் மூலப் பொருளில் பேரியம் நைட்ரேட் உபயோகிக் கக்கூடாது என்றும், சரவெடிகள் தயாரிக்கக்கூடாது என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனை மாவட்ட நிர்வா கங்கள் உறுதிபடுத்த வேண்டும் என்று உச்சநீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது.

எனவே பட்டாசு ஆலைகளில், பட்டாசு உற்பத்தியின் போது பேரியம் நைட்ரேட் ரசாயன மூலப்பொருள் பயன்படுத்துவதை தடுக்கவும், சரவெடிகள் தயாரிப்பதை தடுக்கவும், வீடுகளில் சட்டவிரோத பட்டாசுகள் தயாரிப்பதை தடுப்பதற்காகவும் வருவாய்த்துறை, தீயணைப்பு துறை, காவல்துறை, தொழிலக பாதுகாப்பு துறை அதிகாரிகள் அடங்கிய 4 கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது .

மாவட்ட நிர்வாகத்தின் மறு உத்தரவு வரும்வரையில் கண்காணிப்பு குழுவினர், ஆய்வு பணிகளை தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும். உச்சநீதிமன்ற உத்தரவை பின்பற்றாத பட்டாசு ஆலைகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், தொடர்ந்து விதிமுறைகளை மீறி சட்ட விரோதமாக பட்டாசு தயாரிப்பில் ஈடுபடுபவர்கள் மீது, குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் மேகநாதரெட்டி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Updated On: 23 March 2022 9:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    புத்தாண்டு நல்வாழ்த்துகள்: வாழ்க்கையை வண்ணமயமாக்கும் பொன்மொழிகள்
  2. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் இரண்டு மணி நேரம் கொட்டிய கனமழை
  3. வீடியோ
    நாடாளுமன்றத்துக்கு வந்தது புதிய படை!அப்படி என்ன சிறப்பு ! || #crpf...
  4. லைஃப்ஸ்டைல்
    அறுபதாம் அகவை வாழ்த்துக்கள்: ஒரு புதிய அத்தியாயத்தின் ஆரம்பம்
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பு வாழும் கூடு..! புதுமனை புகுவிழா வாழ்த்து..!
  6. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையின் இனிய பாடலுக்கு இதயப்பூர்வமான வாழ்த்துகள்
  7. குமாரபாளையம்
    சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு
  8. ஈரோடு
    சென்னிமலையில் வீடுகளுக்குள் புகுந்த மழை வெள்ளம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    சுருங்க சொல்லி விளங்க வைக்கிறேன்..! SMS பிறந்தநாள் வாழ்த்து..!
  10. குமாரபாளையம்
    அரசு அனுமதியின்றி செயல்பட்ட பார் மூடல்; கலெக்டர் உத்தரவு