சிவகாசி அருகே ,பட்டாசு ஆலை விபத்து: ஒருவர் உயிரிழப்பு

சிவகாசி அருகே ,பட்டாசு ஆலை விபத்து: ஒருவர் உயிரிழப்பு
X
சிவகாசி ஆலங்குளம் அருகேயுள்ள வளையபட்டி பகுதியில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட தீ விபத்த்தில் ஒருவர் உயிரிழந்தார்

விருதுநகர் மாவட்டம் சிவகாசி - ஆலங்குளம் அருகேயுள்ள வளையபட்டி பகுதியில், முத்துமீனா பயர் ஒர்க்ஸ் என்ற பட்டாசு ஆலை இயங்கி வருகிறது. மாவட்ட வருவாய் அலுவலர் உரிமம் பெற்ற இந்த பட்டாசு ஆலையில் 20க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர்.

இன்று மாலை, இந்தப்பகுதிகளில் இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. அப்போது எதிர்பாராதவிதமாக பட்டாசு ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் சிக்கி கரிவலம்வந்தநல்லூர் அருகேயுள்ள வீரனாபுரம் பகுதியைச் சேர்ந்த ஜெயராமன் (25) பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

வெம்பக்கோட்டை பகுதியைச் சேர்ந்த புவனேஸ்வரன் (33) படுகாயம் அடைந்தார். அங்கிருந்தவர்கள் படுகாயமடைந்த புவனேஸ்வரனை மீட்டு, சிவகாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இறந்த ஜெயராமன் உடல், உடற்கூறாய்விற்காக சிவகாசி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. விபத்து குறித்து ஆலங்குளம் காவல்நிலைய போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story
கொடுமுடியில் விவசாயிகள் போராட்டம் - அதிகாரிகள் செயலாற்றாமல் இருந்ததா