சிவகாசி: குடிநீர் இணைப்பு முறைகேட்டில் மேலும் ஒருவர் ஊழியர் பணியிடை நீக்கம்

சிவகாசி: குடிநீர் இணைப்பு முறைகேட்டில் மேலும் ஒருவர்  ஊழியர் பணியிடை நீக்கம்
X

சிவகாசி நகராட்சி அலுவலகம்:

சிலகாசி மாநகராட்சியில் குடிநீர் இணைப்பு வழங்குவதில் முறைகேட்டில் ஈடுபட்ட மேலும் ஒரு ஊழியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்

சிவகாசி மாநகராட்சி குடிநீர் இணைப்பு முறைகேட்டில் மேலும் ஒரு ஊழியர் சஸ்பெண்ட். செய்யப்பட்டார்.

விருதுநகர் மாவட்டம் சிவகாசி மாநகராட்சிக்கு உட்பட்ட திருத்தங்கல் பகுதியில், வீடுகளுக்கு வழங்கப்பட்ட குடிநீர் இணைப்புகளில் முறைகேடு நடந்திருப்பதாக புகார்கள் எழுந்தது. மாநகராட்சி ஆணையாளர் கிருஷ்ணமூர்த்தி உத்தரவின் பேரில், திருத்தங்கல் பகுதியில் உள்ள வீடுகளில் குடிநீர் இணைப்புகள் சரிபார்க்கும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டனர். இதில் குடிநீர் இணைப்பு பணிகளில் முறைகேட்டில் ஈடுபட்டதாக, கடந்த மாதம் மாநகராட்சி குடிநீர் மேற்பார்வையாளர் கண்ணன் என்பவரை, ஆணையாளர் கிருஷ்ணமூர்த்தி சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார். மேலும் தொடர்ந்து நடத்திய விசாரணையில், குடிநீர் இணைப்பு மேற்பார்வையாளராக பணியாற்றிய பாலகிருஷ்ணன் என்பவருக்கும் முறைகேட்டில் தொடர்பு இருப்பதாக தெரிந்தது. மாநகராட்சி குடிநீர் இணைப்பு பணி மேற்பார்வையாளர் பாலகிருஷ்ணனை, ஆணையாளர் கிருஷ்ணமூர்த்தி சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.

Tags

Next Story
future ai robot technology