காரியாபட்டி அருகே சமுதாயக் கூடம் கட்டும் பணி :அமைச்சர் தங்கம் தென்னரசு துவக்கம்

காரியாபட்டி அருகே சமுதாயக் கூடம்  கட்டும் பணி :அமைச்சர் தங்கம் தென்னரசு துவக்கம்
X

காரியாபட்டி அருகே[புதிய சமுதாயக்கூடம் அமைக்கும் பணியினை அமைச்சர்  அமைச்சர் தங்கம் தென்னரசு துவக்கி வைத்தார். 

New Community Hall Construction Inauguration காரியாபட்டி ஒன்றியம் , எஸ். மறைக்குளத்தில் 25 லட்சம் மதிப்பீட்டில் புதிய சமுதாய கூடம் கட்டும் பணி அமைச்சர் தங்கம் தென்னரசு தொடங்கி வைத்தார்.

New Community Hall Construction Inauguration

விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி ஒன்றியம் எஸ். மறைக்குளத்தில் புதிய சமுதாய கூடம் கட்டுவதற்கான பூமி பூஜை நிகழ்ச்சி நடை பெற்றது. நிதி மற்றும் மனித வள மேலாண்மை துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, புதிய கட்டிட பணிகளை துவக்கி வைத்து பேசினார். மறைக்குளம் கிராம மக்கள் நீண்ட காலமாக வைத்திருந்த கோரிக்கை இன்று நிறைவேற்றும் வகையில் புதிய சமுதாயக் கூடம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழாவில் பங்கெடுப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன் நான்.

நிதி அமைச்சராக மட்டுமல்லாமல், இந்த தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருப்பதால், மரைக்குளம் கிராமத்திற்கு தேவையான திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்து நிறைவேற்ற கடமைப் பட்டுள்ளேன். மேலும், சமுதாயக் கூடம் கட்டுவதற்கு இடம் தேர்வு செய்யும் போது இதே ஊரைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் என்பவர் தன்னுடைய சொந்த நிலத்தை அரசுக்கு தானமாக வழங்கியுள்ளார் .அவருக்கு பொதுமக்கள் சார்பாக மிகுந்த பாராட்டை தெரிவித்துக் கொள்கின்றேன். மேலும், இதே போல கடந்த காலங்களில் ஒரு கிராமத்தில் அரசு பள்ளியோ மருத்துவமனையோ கட்டிடங்கள் கட்டுவதற்கு இது போன்ற கிராம பெரியவர்கள் தங்களது சொந்த நிலங்களை தானமாக செய்துள்ளார்கள். அதனால் தான், கிராமங்களிலே இன்று வரை பல கட்டடங்கள் நிலைத்து இருக்கின்றன. அதே போல, மறைக்குளம் கிராமத்துக்கு சமுதாயக் கூடம் கட்டுவதற்கு எந்த தடையும் இல்லாமல் இடம் கிடைத்தவுடன் உடனடியாக 25 லட்சம் லட்ச ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்தோம் திமுக அரசு தொடர்ந்து, கிராம மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக, பெண்களுக்கு இலவச பஸ் பயணம், மாதந்தோறும் உரிமை தொகை. ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது.

தமிழக முதல்வர் பெண்கள் முன்னேற்றத்திற்கு பல்வேறு திட்டங்களை கொண்டு வந்து நடைமுறைப்படுத்தி வருகிறார்.

ஒரு நாட்டின் முன்னேற்றத்திற்கு காரணமாக விளங்கும் பெண்கள் கல்வி, எந்த அளவுக்கு முக்கியத்துவம் இருக்கிறார்கள் என்று கருதி தான் தமிழக முதல்வர் பெண்களுக்கான பல்வேறு நலத்திட்டங்களை வழங்கி வருகிறார். நாட்டில் கிராம முன்னேற்றத்திற் தமிழக அரசு பல கோடி மதிப்பிட்டில் திட்டங்களை கொண்டு வந்துள்ளது. கிராம மக்களின் . அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றி கொடுப்பதில் திமுக அரசு எப்போதுமே முதலிடம் தான். மக்கள நலனுக்காக படுபட்டுவரும் தமிழக முதல்வருக்கு நீங்கள் எப்போதும் ஆதரவாகவும் இருங்கள் என்று கேட்டுக் கொள்கிறேன் இவ்வாறு பேசினார். நிகழ்ச்சியில், ஒன்றியக் குழுத் தலைவர் பொன்னுத் தம்பி ஒன்றியச் செயலாளர்கள் , கண்ணன், செல்லம் பேரூராட்சித் தலைவர் செந்தில் ,மாவட்ட கவுன்சிலர் தங்க தமிழ்வாணன் ,ஒன்றிய துணைச் செயலாளர் தமிழ்ச்செல்வி செல்லப்பா , மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர்கள் அரசகுளம் சேகர், சிதம்பர பாரதி, மாவட்ட கலை இலக்கிய அணி துணை அமைப்பாளர் வாலை. முத்துச்சாமி , மாவட்ட மாணவரணி செயலாளர் கருப்பு ராஜா, ஒன்றிய இளைஞரணி செயலாளர் ராம்பிரசாத், ஆத்மா குழுத் தலைவர் கந்தசாமி ஆகியோர் உட்பட பலர் கலந்து கொண்டனர் பிரசாத் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் : கர்நாடகா பெண் வேட்பு மனு ஏற்கப்பட்ட சர்ச்சையால்,  பட்டியல் வெளியிட தாமதம்