சிவகாசி முப்பிடாரி அம்மன் ஆலயத்தில் நவராத்திரி விழா
அன்னபூரணி அம்மன் அலங்காரத்தில் சிவகாசி ஸ்ரீமுப்பிடாரி அம்மன்
சிவகாசி ஸ்ரீமுப்பிடாரி அம்மன் அன்னபூரணி அம்மன் அலங்காரத்தில் காட்சியளித்தார்.
நவராத்திரி பண்டிகை நாளை செப்டம்பர் 26ஆம் தேதி தொடங்கிஅக்டோபர் 5ஆம் தேதி துர்கா விசார்ஜன் மற்றும் தசரா கொண்டாட்டங்களுடன் முடிவடைகிறது.
நவராத்திரியின் ஒன்பது நாட்களும் சக்திதேவியின் ஒன்பது அவதாரங்களுக்கும் பூஜை செய்யப்படுகிறது. நவதுர்காவின் ஒவ்வொரு அவதாரமும் துர்கா தேவியின் தனித்துவத்தை பிரதிபலிக்கிறது. நவராத்திரி 9 நாட்களும் வெவ்வேறு பிரசாதங்கள் கடவுளுக்கு படைக்கப்பட்டு வழிபடப்படுகிறது. தமிழகத்தில் வீடுகள், கோயில்களில் வண்ண மயமான, வித்தியாசமான கொலு வைத்து நவராத்திரி கொண்டாடப்படுகிறது. நவராத்திரி 9 நாட்களும் விமரிசையாக கொண்டாடப்படும். பெண்கள் 9 நாட்களும் தங்களை அலங்கரித்து பூஜை செய்து வழிபடுவர்.
அதன் தொடர்ச்சியாக, விருதுநகர் மாவட்டம், சிவகாசியில், இந்து நாடார்கள் உறவின் முறைக்கு சொந்தமான ஸ்ரீகாய்ச்சல்கார அம்மன் கோவிலில் நவராத்திரி திருவிழா விமரிசையாக நடைபெற்று வருகிறது. நேற்று இரவு ஸ்ரீமுப்பிடாரி அம்மன், அன்னபூரணி அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி கொடுத்தார். இதனை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. பக்தர்களுக்கு அன்னதானம் மற்றும் பிரசாதங்கள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை தேவஸ்தான கமிட்டி நிர்வாகிகள் செய்திருந்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu