திருச்சூழி அருகே அரசு கலைக்கல்லூரி திறப்பு விழாவில் அமைச்சர் பங்கேற்பு

திருச்சூழி அருகே அரசு கலைக்கல்லூரி திறப்பு விழாவில் அமைச்சர் பங்கேற்பு
X

அமைச்சர் தங்கம் தென்னரசு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

திருச்சூழி அருகே அரசு கலைக்கல்லூரி திறப்பு விழாவில் அமைச்சர் தங்கம் தென்னரசு பங்கேற்றார்.

விருதுநகர் மாவட்டம் திருச்சுழி பகுதியில் புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியை முதலமைச்சர் ஸ்டாலின் காணொலி காட்சி வழியாக திறந்து வைத்தார். அப்போது திருச்சுழி கல்லூரியில் அமைச்சர் தங்கம்தென்னரசு கலந்து கொண்டு, குத்து விளக்கு ஏற்றினார். பின்னர் கல்லூரியின் வகுப்பு அறைகளை அமைச்சர் பார்வையிட்டார்.

அமைச்சர் தங்கம் தென்னரசு பேசும்போது, திருச்சுழி பகுதி மக்களின் நீண்டநாள் கோரிக்கை இன்று நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த கல்லூரியில் சேர்வதற்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் இணையவழியில் விண்ணப்பித்துள்ளனர். அடுத்த ஆண்டு திருச்சுழி பகுதியில் அரசு தொழிற்பயிற்சி நிலையம் துவங்குவதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. விரைவில் அந்தப்பணிகள் நிறைவேற்றப்பட்டு திருச்சுழி பகுதி மாணவர்களின் எதிர் காலத்திற்கு தேவையான தரமான கல்வி வசதிகள் ஏற்படுத்தப்படும். இதனால் திருச்சுழி பகுதி மக்களின் வாழ்க்கை மேம்பாடு அடையும். இதற்கான அனைத்து வசதிகளையும் தமிழக முதல்வர் ஸ்டாலின் செய்து வருகிறார் என்றார்.

நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் மேகநாதரெட்டி, ராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ்கனி, ராஜபாளையம் எம்.எல்.ஏ. தங்கப்பாண்டியன், சிவகாசி எம்.எல்.ஏ அரசன் அசோகன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
ai in future agriculture