சிவகாசி மாநகராட்சி மண்டல அலுவலகத்தை திறந்து வைத்த மேயர்

சிவகாசி மாநகராட்சி 4 -ஆம் மண்டல அலுவலகத்தை, மாநகராட்சி மேயர் சங்கீதா இன்பம் குத்துவிளக்கேற்றி திறந்து வைத்தார்
Sivakasi Mayor-சிவகாசி மாநகராட்சி 4 -ஆம் மண்டல அலுவலகத்தை, மாநகராட்சி மேயர் சங்கீதா இன்பம் குத்துவிளக்கேற்றி திறந்து வைத்தார்.
விருதுநகர் மாவட்டம் சிவகாசி மாநகராட்சி, நிர்வாக வசதிகளுக்காக 4 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு அதற்கான அலுவலகங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. சிவகாசி பகுதியில் செயல்படும் 4வது மண்டலத்திற்கான அலுவலகம், சிவகாசி நகராட்சி அலுவலகமாக இருந்த பழைய அலுவலக கட்டிடத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ளது. மண்டல அலுவலகம் செயல்படுவதற்கான அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. புதிய மண்டல அலுவலகத்தை சிவகாசி மாநகராட்சி மேயர் சங்கீதா இன்பம் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் துணை மேயர் விக்னேஷ்பிரியா, 4ம் மண்டல தலைவர் சூரியா, மாநகராட்சி கவுன்சிலர்கள் மற்றும் அதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக மேயர் சங்கீதா இன்பம் தலைமையில் காமராஜர், அண்ணா உருவச்சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu