சிவகாசி பட்டாசு ஆலையில் மூலப் பொருள்கள் திருடியவர் கைது

சிவகாசி பட்டாசு ஆலையில் மூலப் பொருள்கள் திருடியவர் கைது
X
சிவகாசி அருகே பட்டாசு ஆலையிலிருந்து மூலப் பொருட்களை திருடியவர் கைது செய்யப்பட்டார்.

சிவகாசி அருகே பட்டாசு ஆலையிலிருந்து மூலப் பொருட்களை திருடியவர் கைது செய்யப்பட்டார்.

சிவகாசி அருகே பட்டாசு ஆலையிலிருந்து மூலப் பொருட்களை திருடியவர் கைது செய்யப்பட்டார்.சிவகாசி அருகே பட்டாசு ஆலையிலிருந்து மூலப் பொருட்களை திருடியவர் கைது செய்யப்பட்டார்.விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகேயுள்ள மீனம்பட்டி பகுதியில், கருப்பசாமி (43) என்பவர் பட்டாசு ஆலையை குத்தகைக்கு எடுத்து நடத்தி வருகிறார். இந்த பட்டாசு ஆலையில் பேன்சி ரக வெடிகள் தயாரிக்கப்பட்டு வருகிறது.

திருத்தங்கல், பெரியார் காலனி பகுதியைச் சேர்ந்த முனியாண்டி (44) என்பவர் பட்டாசு ஆலையில் வேலை பார்த்து வருகிறார். பேன்சி வெடிகள் தயாரிப்பதற்கான அலுமினிய பவுடர் மற்றும் 50 கிலோ மணி மருந்து உள்ளிட்ட பொருட்கள் திடீரென்று காணாமல் போனது. ஆலையிலிருந்த முனியாண்டியும் காணாமல் போனார். உடனடியாக பட்டாசு ஆலையில் வேலை பார்த்துக்கொண்டிருந்தவர்கள், முனியாண்டியை தேடினர். அப்போது பட்டாசு தயாரிக்கும் மூலப் பொருட்களை ஒரு இருசக்கர வாகனத்தில் வைத்து கொண்டு சென்ற முனியாண்டியை மடக்கி பிடித்தனர். இது குறித்து பட்டாசு ஆலை மேலாளர் தங்கதுரை, சிவகாசி கிழக்கு காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் முனியாண்டியை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!