மதுரை ரவுடி வரிச்சூர் செல்வம் விருதுநகரில் கைது

மதுரை   ரவுடி வரிச்சூர் செல்வம் விருதுநகரில் கைது
X

வரிச்சூர் செல்வம்(பைல் படம்)

மதுரை பகுதியைச் சேர்ந்த பிரபல ரவுடி வரிச்சூர் செல்வம், கொலை வழக்கு ஒன்றில் கைது செய்யப்பட்டார்

மதுரை பகுதியைச் சேர்ந்த பிரபல ரவுடி வரிச்சூர் செல்வம், கொலை வழக்கு ஒன்றில் கைது செய்யப்பட்டு, சாத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.

பிரபல ரவுடி வரிச்சூர் செல்வம் மீது பல்வேறு வழக்குகள் உள்ளன. கொலை, கொலை முயற்சி, ஆட் கடத்தல், மிரட்டி பணம் பறித்தல், அடிதடி உட்பட பல வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்த நிலையில், வரிச்சூர் செல்வத்தின் கூட்டாளி செந்தில் என்பவர் கடந்த 2021ம் ஆண்டு திடீரென்று காணாமல் போனார். காணாமல் போன செந்தில் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

காணாமல் போன செந்தில் கொலை செய்யப்பட்டார் என்று போலீசார் விசாரணையில் தெரிய வந்தது. குற்றவாளியை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு, போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். செந்தில் கொலை வழக்கில், வரிச்சூர் செல்வத்தை விருதுநகர் போலீசார் கைது செய்தனர். பிடிபட்ட பிரபல ரவுடி வரிச்சூர் செல்வத்தை மருத்துவ பரிசோதனைக்காக விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு போலீசார் அழைத்து வந்துள்ளனர். அவருக்கு மருத்துவ பரிசோதனைகள் முடிந்தவுடன், சாத்தூர் நீதிமன்றத்தில் அவரை போலீசார் ஆஜர்படுத்த இருப்பதாக காவல்துறை வட்டாரங்கள் தகவல் தெரிவித்தன.

பிரபல ரவுடி விருதுநகர் போலீசில் சிக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!