காரியாபட்டியில் ஒருங்கிணைந்த வேளாண் திட்டம் தொடக்கம்

காரியாபட்டியில்  ஒருங்கிணைந்த வேளாண்  திட்டம் தொடக்கம்
X

காரியாபட்டி ஒன்றியத்தில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை திட்டம் தொடங்கப்பட்டது

விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி ஒன்றியத்தில், கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை திட்டம் துவங்கப்பட்டது

காரியாபட்டி ஒன்றியத்தில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை திட்டம் தொடங்கப்பட்டது.

விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி ஒன்றியத்தில், கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை திட்டம் துவங்கப்பட்டது. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், சென்னையிலிருந்து காணொளி மூலம் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை திட்டத்தை தொடங்கி வைத்தார்.

அதைத் தொடர்ந்து, விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி ஒன்றியத்தில், முடுக்கங்குளம் ,ஊராட்சி கம்பிக்குடி, ஊராட்சி , ,கடமங்குளம் ஊராட்சிகளில் ,திட்டம் துவங்கப்பட்டது . காரியாபட்டி ஒன்றியம் முடுக்கன்குளம் ஊராட்சியில் , நடைபெற்ற துவக்க விழாவுக்கு, முடுக்கங்குளம் ஊராட்சி மன்றத் தலைவர் சாந்திமுத்துச்சாமி தலைமை வகித்தார் . பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.காரியாபட்டி கம்பிக்குடி ஊராட்சி, மந்திரி ஓடையில் ஊராட்சித்தலைவர் லட்சுமி பாலு தலைமையில் ,திட்ட துவக்கவிழா நடந்தது. வட்டாட்சியர் தனக்குமார் பயனாளிகளுக்கு, வேளாண் கருவிகள் வழங்கினார் .

உதவி இயக்குனர் தெய்வம், வேளாண்மை அலுவலர் மகாராணி, துணை வட்டார வளர்ச்சி அலுவலர் புவனேஸ்வரி, கிராம நிர்வாக அதிகாரி சரஸ்வதி கிராமஉதவியாளர் குணசேகரன் ஆகியோர் கலந்து கொண்டனர். கடமங்குளம் ஊராட்சி புல்லூரில், நடைபெற்ற திட்ட துவக்கவிழா நிகழ்ச்சியில் துணை ஆட்சியர் திருவாசகம் தலைமை வகித்தார்.ஊராட்சி மன்ற தலைவர் குருவம்மாள் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் ,வட்டாட்சியர் தனக்குமார், திமுக ஒன்றியச்செயலாளர் கண்ணன் , துணைத்தலைவர் ராஜேந்திரன், மாவட்ட கவுன்சிலர் தங்க தமிழ்வாணன், ஆத்மா திட்டத்தலைவர் கந்தசாமி ஆகியோர் கலந்துகொண்டனர்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்