காரியாபட்டி ஊராட்சி ஒன்றியக் குழுக் கூட்டம்
காரியாபட்டி ,ஊராட்சி ஒன்றிய கூட்டம்.
காரியாபட்டி யில் கலைஞர் நூற்றாண்டு அறிவு பூங்கா அமைக்க யூனியன் கட்டத்தில் தீர்மானம் நிறை வேற்றப் பட்டது.
விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி ஊராட்சி ஒன்றிய குழு கவுன்சில் கூட்டம் நடைபெற்றது. ஒன்றியக் குழுத் தலைவர் முத்துமாரி தலைமை வைத்தார். துணைத் தலைவர் ராஜேந்திரன் முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில், ஒன்றியம் முழுக்க கிராமப்பகுதிகள் நிறைந்த பகுதியாகும். அரசுத்தேர்வுகளுக்கு தங்களை தயார்படுத்திக் கொள்ள இங்குள்ள கிராமப்பகுதி மாணவர்கள் வழிகாட்டுதலுக்கும் இங்கிருந்து, மதுரை, விருதுநகர் செல்ல வேண்டிய சூழல் உள்ளது.
எனவே, இதனை போக்கும் விதமாக காரியாபட்டி ஊராட்சி ஒன்றிய வளாகத்திலேயே, அமர்ந்து மாணவ, மாணவிகள் படிக்க இட வசதியும், பல்வேறு புத்தகங்களை வாசிக்க இன்டெர்நெட் வசதியுடன் நூலக வசதியும், மாணவர்களை ஆற்றுப்படுத்த (Counselling) கூட்ட அரங்கம் ஆகியவை கொண்ட "கலைஞர் நூற்றாண்டு அறிவு பூங்கா (Knowledge Park)" அமைக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கூட்டத்தில், கவுன்சிலர்களின் விவாதம் நடந்தது. கவுன்சிலர்கள் பேசுகையில், கழுவனச் சேரி அரசு பள்ளிக்கு செல்லும் சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் ஒன்றியத்தில் உள்ள கண்மாய் கரைகள், மடைகள் , கலுங்குகளை பராமரிக்க வேண்டும். முடுக்கன்குளம் பகுதியில் மயான கரை சாலை சீரமைக்க வேண்டும். மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்க வேண்டும். மேலும், கலைஞர் கனவு இல்ல திட்டம் செயல்படுத்த வேண்டும். சூரனூர் பகுதியில், பழுதடைந்த கண்மாய் கரைகளை பராமரிப்பு செய்ய வேண்டும். பிசிண்டி, அச்சங்குளம் மயான சாலையில் , மின் விளக்கு அமைக்க வேண்டும் என்று கவுன்சிலர்கள் கூட்டத்தில், கோரிக்கைகளை முன்வைத்து பேசினார்கள்.
இதற்கு ஆணையாளர் , பதிலளித்து பேசுகையில், கவுன்சிலர் முன்வைத்த கோரிக்கைகள் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப் படும். என்று தெரிவித்தார். கூட்டத்தில், கவுன்சிலர்கள் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கற்பக போத்திதிராஜா, மற்றும் அலுவலர்கள் பங்கேற்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu