காவல்துறை சார்பு ஆய்வாளர் வீட்டில் நகை, பணம் கொள்ளை

காவல்துறை சார்பு ஆய்வாளர் வீட்டில் நகை, பணம் கொள்ளை
X

பைல் படம்.

திருவில்லிபுத்தூரில், குலதெய்வ வழிபாட்டிற்காக வெளியூர் சென்றிருந்த காவல் சார்பு ஆய்வாளர் வீட்டில் 30பவுன் நகை மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன.

விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூர் மாவட்ட நீதிமன்றம் அருகேயுள்ள ராஜீவ்காந்தி நகர் பகுதியைச் சேர்ந்தவர் கோமதிநாயக கண்ணன் (40). இவர் 11வது பட்டாலியனில் சார்பு ஆய்வாளராக பணிபுரிந்து வருகிறார்.

கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு இவர் தனது குடும்பத்தினருடன், கிருஷ்ணன்கோவில் அருகேயுள்ள குன்னூரில் இருக்கும் குலதெய்வக் கோவிலுக்கு சென்றிருந்தார். நேற்று கோவிலில் இருந்து வீடு திரும்பிய கோமதிநாயக கண்ணன், வீட்டு கதவின் பூட்டு உடைக்கப்பட்டு கிடப்பதைப் பார்த்து அதிர்ச்சியடைந்தார்.

வீட்டின் பீரோவில் வைக்கப்பட்டிருந்த 30 பவுன் தங்க நகைகள், வெள்ளிப் பொருட்கள் மற்றும் 3 லட்சம் ரூபாய் ரொக்கப்பணம் உள்ளிட்டவை திருட்டு போனதைக்கண்டு மேலும் அதிர்ச்சியடைந்தார்.

இது குறித்து கோமதிநாயக கண்ணன், திருவில்லிபுத்தூர் நகர் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார். போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story
பெருந்துறையில் புகையிலை விற்பனைக்கு எதிராக கடைகளுக்கு ரூ.50 ஆயிரம் அபராதம்