விருதுநகர் மாவட்டத்தில், ஊரக வளர்ச்சித் துறை ஊழியர்கள் சிறு விடுப்பு போராட்டம்

விருதுநகர் மாவட்டத்தில், ஊரக வளர்ச்சித் துறை ஊழியர்கள் சிறு விடுப்பு போராட்டம்
X

விருதுநகரில் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்களின் சிறுவிடுப்பு போராட்டத்தால் வெறிச்சோடிய அலுவலகம்

25 ஊராட்சிகள் அடங்கியதை தனி ஊராட்சி ஒன்றியமாக அறிவிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தியுள்ளனர்

விருதுநகர் மாவட்டத்தில், ஊரக வளர்ச்சித்துறை ஊழியர்கள் சிறு விடுப்பு போராட்டத்தால் பணிகள் பாதிப்பு.

விருதுநகர் மாவட்டத்தில், 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில், ஊரக வளர்ச்சித்துறை ஊழியர்கள் சிறு விடுப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

விருதுநகர் மாவட்டத்தில் 11 ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த அலுவலகங்களில் ஊரக வளர்ச்சித்துறையில் 500க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். ஊரக வளர்ச்சித்துறையில் காலியாக இருக்கும் பணியிடங்கள் உட்பட காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும், ஊழியர்கள் மீது திணிக்கப்படும் பணி நெருக்கடிகள், காலங்கடந்த ஆய்வுப் பணிகளை உடனடியாக கைவிட வேண்டும். 500க்கும் மேற்பட்ட, ஊரக வளர்ச்சிதுறை அலுவர்கள் சங்கத்தை சேர்ந்த ஊழியர்கள், ஊராட்சி செயலாளர்கள் அனைவருக்கும் கருவூலம் மூலம் ஊதியம் வழங்க வேண்டும்.

பெரிய ஊராட்சிகளை பிரித்து, 25 ஊராட்சிகள் அடங்கியவற்றை ஊராட்சி ஒன்றியமாக மாற்றியமைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, ஊரக வளர்ச்சித்துறைஊழியர்கள் அனைவரும் இன்று சிறு விடுப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் ஊரக வளர்ச்சித்துறை அலுவலகங்கள் ஊழியர்கள் இல்லாமல் வெறிச்சோடியது. ஊழியர்களின் சிறு விடுப்பு போராட்டத்தால் பணிகள் பாதிக்கப்பட்டு, பொதுமக்கள் கடும் சிரமம் அடைந்தனர்.

ஊரக வளர்ச்சித்துறையின் நோக்கம்... மக்கள் நலத்தைப் பேணுகின்ற மாநிலமான தமிழகத்தில், அரசின் முயற்சிகள் அனைத்தும் ஊரகப்பகுதிகளில் வாழும் மக்களின், சமூக, பொருளாதார, அரசியல் முன்னேற்றத்தை நோக்கியே அமைந்துள்ளன. கிராமப்புறங்களில் மக்கள் பங்கேற்புடன் கூடிய சமூக, பொருளாதார வளர்ச்சியே ஊரக வளர்ச்சியின் நோக்கமாகும்.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, ஊரக வளர்ச்சி என்பது அடிப்படை வசதிகளையும், தரமான சேவைகளையும் சிறந்த முறையில் கிராமப்புற மக்களுக்கு அளிப்பதன் மூலம் அவர்களின் பொருளாதார வளர்ச்சி, சமூக நீதி மற்றும் வாழ்க்கைத்தரம் ஆகியவற்றை மேம்படுத்தும் விதமாக அமைந்துள்ளது.ஊரக பகுதிகளில் அடிப்படைக் கட்டமைப்புகளை மேம்படுத்துவது, சமுதாயத்திற்கு தேவையான சேவைகளை அளிப்பது, வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழும் குடும்பங்கள் மற்றும் சுயஉதவிக் குழுக்களுக்குத் தேவையான உதவிகளை வழங்குவது போன்றவையே அரசின் அடிப்படை நோக்கமாகும்.

வறுமை ஒழிப்பு மற்றும் கிராமப்புற மக்களுக்குத் தரமான சேவைகளை வழங்குதல் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டே ஊரக வளர்ச்சித் திட்டங்கள் அமைகின்றன. இந்த அரசின் தொடர் முயற்சிகள், வறுமையை ஒழித்துத் தரமான வாழ்விற்குத் தேவையான அடிப்படைகளை நிர்ணயம் செய்யும்.

ஊரகப்பகுதிகளில் வாழும் மக்களின் சமுதாய மற்றும் பொருளாதார முன்னேற்றத்தில் தமிழக அரசு உறுதி கொண்டுள்ளது. 2011ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 51.55 விழுக்காடு, அதாவது 3.72 கோடி மக்கள் ஊரகப் பகுதிகளில் வாழ்கின்றனர்.

மாநில மக்கள் தொகையில் பெரும்பான்மையினர் ஊரகப் பகுதிகளில் வாழ்வதாலும், அவர்களின் நலத்தை பேணுகின்ற மாநிலமாக தமிழகம் திகழ்வதாலும் பொருளாதார வளர்ச்சி, சமூக நீதி, மக்களின் வாழ்க்கைத் தரத்தினை உயர்த்துதல், வறுமை ஒழிப்பிற்கு முக்கியத்துவம் அளித்தல, அடிப்படை வசதிகள் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துதல் ஆகியவற்றில் நேரடித் தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில் ஊரக வளர்ச்சியின் குறிக்கோள்கள் மற்றும் இலக்குகளாக கொண்டு செயல்படுகிறது. ஊரக உள்ளாட்சி அமைப்புகளின் ஆக்கப்பூர்வமான பங்கேற்போடு வளர்ச்சித் திட்டங்களை சிறந்த முறையில் நிறைவேற்றுதன் மூலம் இத்தகைய குறிக்கோள்கள் எட்டப்படும்.


Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!