சிவகாசி அருகே சட்டவிரோதமாக மது விற்பனை

சிவகாசி அருகே சட்டவிரோதமாக மது விற்பனை
X
சிவகாசி அருகே சட்டவிரோதமாக மது விற்பனை செய்தவரை காவல்துறையினர் கைது செய்தனர். 50 மது பாட்டில்கள் பறிமுதல்

சிவகாசி அருகே நாரணாபுரம் பகுதிகளில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அப்பகுதியில் சட்டவிரோதமாக மது விற்பனை நடைபெறுவதாக தகவல் கிடைத்துள்ளது.

அந்த தகவலின் படி அங்கு சென்று பார்த்த போது மது விற்பனை நடப்பதுதெரியவந்தது. இதனை தொடர்ந்து சட்டவிரோதமாக மது விற்பனை செய்து கொண்டிருந்த வெள்ளையாபுரத்தை சேர்ந்த பிச்சை பாண்டியன் என்பவரை கைது செய்து, அவரிடம் இருந்த 50 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!