சிவகாசி அருகே மனைவியை தாக்கிய கணவருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை

சிவகாசி அருகே மனைவியை கொடூரமாக தாக்கிய கணவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது
விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகேயுள்ள திருத்தங்கல், ஆலாவூரணி அண்ணா காலனி பகுதியைச் சேர்ந்தவர் முத்துப்பாண்டி (35). இவரது மனைவி காளீஸ்வரி (30). கணவன், மனைவி இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்த நிலையில், கடந்த 2016ம் ஆண்டு முத்துப்பாண்டி, தனது மனைவி காளீஸ்வரியை கடுமையாக தாக்கி அரிவாளால் வெட்டி படுகாயப்படுத்தினார்.
திருத்தங்கல் காவல் நிலையத்தில் காளீஸ்வரி கொடுத்த புகாரின் பேரில், முத்துப்பாண்டியை போலீசார் கைது செய்தனர். இது குறித்த வழக்கு திருவில்லிபுத்தூர் மகிளா நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி பகவதி அம்மாள், குற்றவாளி முத்துப்பாண்டிக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், 3 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்தார். அபராதம் கட்டத் தவறினால், மேலும் 3 மாதங்கள் சிறை தண்டனையும் விதித்து தீர்ப்பு கூறினார். மனைவியை கடுமையாக தாக்கி, கொலை செய்ய முயன்ற கணவனுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu