சிறுமிக்கு பாலியல் தொல்லை : உடந்தையாக இருந்த கணவன், மனைவிக்கு சிறை

சிறுமிக்கு பாலியல் தொல்லை :  உடந்தையாக இருந்த  கணவன், மனைவிக்கு சிறை
X

கோர்ட் மாதிரி படம் 

அருப்புக்கோட்டை அருகே, சிறுமிக்கு பாலியல் தொல்லையில் உடந்தையாக இருந்த கணவன், மனைவி 2 பேருக்கும் தலா 20 ஆண்டு சிறை.

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகேயுள்ள கட்டங்குடி பகுதியைச் சேர்ந்தவர் சரவணன் (41). இவரது மனைவி நதியா (31). இவர்கள் இருவரும் கடந்த ஆண்டு, அதே பகுதியைச் சேர்ந்த 5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தது தொடர்பான சம்பவத்தில் உடந்தையாக இருந்துள்ளனர்.

இது குறித்து சிறுமியின் பெற்றோர், அருப்புக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தனர். சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த போலீசார், சரவணன் மற்றும் நதியா இருவரையும் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர். இது குறித்த வழக்கு திருவில்லிபுத்தூர் போக்சோ நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த போக்சோ நீதிமன்ற நீதிபதி பூரண ஜெயஆனந்த், சிறுமிக்கு பாலியல் தொல்லைக்கு உடந்தையாக இருந்த சரவணன், அவரது மனைவி நதியா ஆகிய இருவருக்கும் தலா 20 ஆண்டு சிறை தண்டனையும், தலா 2 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார்.

திருவில்லபுத்தூர் போக்சோ நீதிமன்றத்தில், போக்சோ வழக்கில் பெண் ஒருவருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது இதுவே முதன்முறையாகும்.

Tags

Next Story