சிவகாசி சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த மழை: பொதுமக்கள் மகிழ்ச்சி

சிவகாசி சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த மழை: பொதுமக்கள் மகிழ்ச்சி
X

சிவகாசி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இன்று காலை நேரத்தில் பரவலாக மழை பெய்தது. 

விருதுநகர் மாவட்டம் சிவகாசி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இன்று காலை நேரத்தில் பரவலாக மழை பெய்தது.

விருதுநகர் மாவட்டம் சிவகாசி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இன்று காலை நேரத்தில் பரவலாக மழை பெய்தது. விருதுநகர் மாவட்டம் முழுவதுமே பரவலாக மழை பெய்தது. மழை காரணமாக விருதுநகர் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.

இந்த நிலையில் காலை 9 மணிக்கு மேல் மழை இல்லாமல், ஓரளவு வெயில் அடிக்கத்துவங்கியது. இன்று பலத்தமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்த நிலையில் மழை பெய்யாமல் இருக்கின்றதே என்று மக்கள் நினைத்த நிலையில், மாலை 4 மணிக்கு மேல் மீண்டும் மழை பெய்யத் துவங்கியது. சற்று நேரத்தில் பலத்தமழை பெய்தது. சுமார் 1 மணி நேரம் பரவலாக மழை பெய்தது.

சிவகாசி சுற்றுவட்டாரப் பகுதிகளான திருத்தங்கல், சித்துராஜபுரம், விஸ்வநத்தம், செங்கமலநாச்சியார்புரம், வெள்ளையாபுரம், சாட்சியாபுரம், ரிசர்வ்லைன் உள்ளிட்ட பல பகுதிகளிலும் இன்று மாலை பரவலாக மழை பெய்தது. சிவகாசி பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக, இந்தப் பகுதிகளில் உள்ள நீர் நிலைகளில் தண்ணீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் நிலத்தடி நீர் மட்டமும் அதிகரிக்கும் என்று பொதுமக்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்..

Tags

Next Story
பழனி கோயில் நிர்வாகம் 3,134 மூட்டைகள் கரும்பு சா்க்கரை கொள்முதல் செய்தது