சிவகாசி பகுதியில் சாரல் மழை: விவசாயிகள் பொதுமக்கள் மகிழ்ச்சி

சிவகாசி பகுதியில் சாரல் மழை:  விவசாயிகள் பொதுமக்கள் மகிழ்ச்சி
X

சிவகாசி பகுதியில் சாரல்மழையால் பொதுமக்கள் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.

கடந்த இரண்டு நாட்களாக பரவலாக மழை பெய்த நிலையில் வெப்பம் தணிந்து குளிர்ந்த சூழல் நிலவியது

சிவகாசி பகுதியில் சாரல்மழையால் பொதுமக்கள் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.

விருதுநகர் மாவட்டம் சிவகாசி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில், இன்று பிற்பகல் பரவலாக சாரல்மழை பெய்தது.கடந்த இரண்டு நாட்களாக பரவலாக மழை பெய்த நிலையில், வெயில் இல்லாமல் குளிர்ந்த சூழல் இருந்து வந்தது. இந்த நிலையில் இன்று காலை வழக்கம் போல கடுமையாக வெயில் அடித்தது. பிற்பகலில் திடீரென்று மேகங்கள் திரண்டு வந்து பலத்த மழை பெய்தது. சிவகாசி நகர் பகுதிகள் மற்றும் புறநகர் பகுதிகள், திருத்தங்கல், சாட்சியார்புரம், ரிசர்வ்லைன், சசிநகர், சித்துராஜபுரம், பேர்நாயக்கன்பட்டி உள்ளிட்ட பல இடங்களிலும் பரவலாக சாரல்மழை பெய்தது. சிவகாசி சுற்றுவட்டாரப் பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Tags

Next Story