சிவகாசி சுற்றுவட்டாரப் பகுதிகளில் பலத்த மழை: பொதுமக்கள் மகிழ்ச்சி

சிவகாசி சுற்றுவட்டாரப் பகுதிகளில் பலத்த மழை: பொதுமக்கள் மகிழ்ச்சி
X

சிவகாசி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெய்த மழை.

விருதுநகர் மாவட்டம் சிவகாசி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பரவலாக மழை பெய்தது.

விருதுநகர் மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக, ஆங்காங்கே பரவலாக நல்ல மழை பெய்து வருகிறது. நேற்று முழுவதும் மாவட்டத்தில், மழை இல்லாமல் வறண்ட சூழ்நிலை இருந்து வந்தது. இன்று காலையில் இருந்து கோடை வெயில் மிகக் கடுமையாக இருந்தது.

இந்த நிலையில் இன்று மாலை, சிவகாசி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் திடீரென்று மேகங்கள் திரண்டுவந்து பலத்த காற்று வீசியது. சற்று நேரத்தில் இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது.

சிவகாசி புறநகர் பகுதிகள், மீனம்பட்டி, பாறைப்பட்டி, சின்னக்காமன்பட்டி, பேராபட்டி, அனுப்பங்குளம் உள்ளிட்ட பல இடங்களில் பலத்த மழை பெய்தது. இதனால் அந்தப்பகுதி மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

Tags

Next Story
ai in future agriculture