திருச்சுழி அருகே பசுமை கிராம திட்டம் தொடக்கம்

திருச்சுழி அருகே பசுமை கிராம திட்டம் தொடக்கம்
X

திருச்சுழி அருகே பசுமை கிராம திட்டம் தொடக்கம்.

திருச்சுழி ஒன்றியம் உடையனாம்பட்டி ஊராட்சியில் பசுமை கிராம திட்டம் தொடக்கி வைக்கப்பட்டது

விருதுநகர் மாவட்டம், திருச்சுழி அருகே உடையனாம்பட்டியில், பசுமை கிராம திட்டம் துவங்கப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டம், திருச்சுழ ஒன்றியம், உடையனாம்பட்டி ஊராட்சி மற்றும் காரியாபட்டி கிரீன் பவுண்டேஷன் சார்பாக பசுமை கிராம திட்டம் துவக்கவிழா ஊராட்சி ஒன்றிய துவக்கப்

பள்ளியில் நடைபெற்றது. ஊராட்சி மன்றத் தலைவர் ஜெயமுருகன் தலைமை வகித்தார். தலைமை ஆசிரியர் சண்முகநாதன் முன்னிலை வகித்தார். கிரீன் பவுண்டேசன் நிர்வாகி பொன்ராம் வரவேற்றார்.

நிகழ்ச்சியில், குறுங்காடுவளர்ப்பு திட்டத்தை ஊராட்சி மன்றத்தலைவர் ஜெயமுருகன் தொடங்கிவைத்தார். இல்லங்கள் தோறும் தென்னைமரங்கள் வளர்ப்பு திட்டத்தை சப்.இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் தொடங்கிவைத்தார். நிகழ்ச்சியில், வேளாண்காடுகள் வளர்ப்பு திட்ட ஆலோசகர் விக்னேஷ், மரம் வளர்ப்பு பயன்கள் குறித்து பேசினார் . கிரின் பவுண்டேசன் சட்ட ஆலோசகர் செந்தில்குமார், கிராம நிர்வாக அலுவலர் சங்கீதா, ஆசிரியர்கள் முத்துப்பாண்டி, பழனிவேல், குருசாமி, ஆறுமுகம் மற்றும் பணித்தள பொறுப்பாளர் கலந்துகொண்டனர். ஊராட்சி செயலாளர் கிருஷ்ணன் நன்றி கூறினார்.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!