காரியாபட்டி அருகே விலையில்லா ஆடுகள் வழங்கும் திட்டம்: அமைச்சர் தொடக்கம்

ஆடுகள் வழங்கும் திட்டத்தை அமைச்சர் தங்கம் தென்னரசு தொடங்கி வைத்தார்.
ஆடுகள் வழங்கும் திட்டத்தை அமைச்சர் தங்கம் தென்னரசு தொடங்கி வைத்தார்.
விருதுநகர் மாவட்டம், கால்நடை பராமரிப்புத்துறை சார்பாக, ஊரகப்பகுதிகளில் ஏழ்மை நிலையில் உள்ள கணவரை இழந்த கைவிட ப்ட்ட ஆதரவற்ற பெண் பயனாளிகளுக்கு 100 சதவீத மானியத்துடன் ஆடுகள் வழங்கும் விழாவானது, காரியாபட்டி தோணுகாலில் ஊராட்சியில் நடைபெற்றது.
மாவட்ட வருவாய் அலுவலர் ரவிக்குமார் தலைமை வகித்தார். கால்நடை பராமரிப்பு துறை இணை இயக்குநர் ரவிச்சந்திரன் வரவேற்றார். தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, 5 ஆடுகள் வீதம் 100 பயனாளிகளுக்கு வழங்கி பேசினார். வருவாய் கோட்டாட்சியர் கல்யாணகுமார், கால்நடை துறை இணை இயக்குநர், ஒன்றியக்குழுத் தலைவர் முத்துமாரி, துணைத் தலைவர் ராஜேந்திரன், மாவட்ட கவுன்சிலர் தங்கதமிழ்வாணன், ஒன்றிய திமுக செயலாளர் கண்ணன், ஊராட்சி மன்றத் தலைவர்கள் தோணுகால் பாலமுருகன், பந்தனேந்தல் சுப்பிரமணியம், கல்குறிச்சி கணேசன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu