பட்டாசு தயாரிப்பு தொடர்பாக 4 பேர் கைது

சாத்தூர் அருகே, வீட்டில் வைத்து சட்ட விரோதமாக பட்டாசு தயாரிப்பில் ஈடுபட்ட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
விருதுநகர் மாவட்டம், சாத்தூர் மற்றும் வெம்பக்கோட்டை தாலுகா பகுதிகளில், வீடுகளில் வைத்து சட்ட விரோதமாக சரவெடிகள் தயாரிக்கப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் வெம்பக்கோட்டை காவல்நிலைய சார்பு ஆய்வாளர்கள் வெற்றிமுருகன், ஜவஹர், வேல்சாமி தலைமையில் போலீசார் தாயில்பட்டி, வெற்றிலையூரணி, மேலஒட்டம்பட்டி, வெம்பக்கோட்டை பகுதிகளில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது வெற்றிலையூரணி பகுதியைச் சேர்ந்த மாரியப்பன் (64), மேலஒட்டம்பட்டி பகுதியைச் சேர்ந்த ஜெகதீசன் (41), வெம்பக்கோட்டை பகுதியைச் சேர்ந்த சுப்புராஜ் (53), தாயில்பட்டி பகுதியைச் சேர்ந்த பாலமுருகன் (33) ஆகிய 4 பேரும் சட்ட விரோதமாக, வீட்டில் வைத்து சரவெடி மற்றும் பட்டாசுகள் தயாரிப்பில் ஈடுபட்டது தெரிந்தது. இது குறித்து வழக்குபதிவு செய்த போலீசார், சட்ட விரோதமாக பட்டாசு தயாரிப்பில் ஈடுபட்ட நான்கு பேரையும் கைது செய்தனர். மேலும் கைது செய்யப்பட்ட நபர்களிடமிருந்து சுமார் ஒரு லட்சம் ரூபாய் மதிப்பிலான பட்டாசுகளையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
Tags
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu