சிவகாசி அருகே உணவகங்களில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சோதனை

சிவகாசி அருகே உணவகங்களில்  உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சோதனை
X
Food Safety Department officials raided restaurants

சிவகாசி அருகே, உணவகங்களில் சுகாதாரத்துறை அதிகாரிகள் திடீர் சோதனை மேற்கொண்டனர்.

விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகேயுள்ள ஆனையூர் ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் ஜெயசந்திரன் தலைமையில், சுகாதாரத்துறை அதிகாரிகள் உணவகங்களில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். ரிசர்வ்லைன், நேருஜி நகர் பகுதியில் உள்ள உணவகங்களில் கெட்டுப்போன, 7 கிலோ புரோட்டாக்களை பறிமுதல் செய்து அழித்தனர். மேலும் பள்ளி மற்றும் வழிபாட்டு தலங்கள் அருகே புகையிலை பொருட்கள், சிகரெட் விற்பனை செய்த 10 கடைகளுக்கு தலா 200 ரூபாய் அபராதம் விதித்தனர். தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் 27 கிலோ பறிமுதல் செய்யப்பட்டது. திடீர் சோதனையில் சுகாதார ஆய்வாளர்கள் காளிராஜ், வெற்றிவேல், கிருஷ்ணமூர்த்தி, அரவிந்த்குமார், மூர்த்தி, செல்வகுமார் உட்பட பலர் சோதனையில் ஈடுபட்டனர்.

Tags

Next Story
ஈரோட்டில் வருமான வரித் துறை சோதனை நிறைவு..!