சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து: 3 அறைகள் சேதம்

சிவகாசி அருகே  பட்டாசு ஆலையில் வெடி விபத்து: 3 அறைகள் சேதம்
X

பட்டாசு ஆலையில் நேரிட்ட  வெடி விபத்தில் சேதமடைந்த 3 அறைகள்

சிவகாசி சுற்றுவட்டாரப் பகுதிகளில் தொடர்ந்து சாரல் மழை பெய்து வந்ததால் பட்டாசு உற்பத்தி பணிகள் நிறுத்தப்பட்டிருந்தன

சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் நேரிட்ட வெடி விபத்தில் 3 அறைகள் இடிந்து விழுந்து சேதமடைந்தன. தொழிலாளர்கள் இல்லாததால் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது

விருதுநகர் மாவட்டம், சிவகாசி, வேலாயுதம் ரஸ்தா பகுதியைச் சேர்ந்தவர் பாலாஜி பாவநாசம் (41). இவர், சிவகாசி அருகேயுள்ள செங்கமலப்பட்டி பகுதியில் பட்டாசு ஆலை நடத்தி வருகிறார். மத்திய வெடிபொருள் கட்டுப்பாடுத்துறை அனுமதி பெற்று இயங்கும் இந்த பட்டாசு ஆலையில் 200க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர்.

கடந்த சில நாட்களாக சிவகாசி சுற்றுவட்டாரப் பகுதிகளில் தொடர்ந்து சாரல் மழை பெய்து வந்ததால் பட்டாசு உற்பத்தி பணிகள் நிறுத்தப்பட்டிருந்தன. 2 நாட்களாக பட்டாசு ஆலையில் பணிகள் எதுவும் நடைபெறவில்லை. இந்த நிலையில் பூட்டிக்கிடந்த பட்டாசு ஆலையில் நேற்று மாலை 6 மணியளவில் எதிர்பாராதவிதமாக வெடி விபத்து ஏற்பட்டது.

மருந்து கலவை செய்யும் அறையில் வைக்கப்பட்டிருந்த பட்டாசு மூலப் பொருட்கள், ரசாயன மாற்றம் ஏற்பட்டு விபத்து ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த விபத்தில், பட்டாசு மருந்து கலவை அறை முற்றிலும் இடிந்து விழுந்து தரைமட்டமானது. அருகில் இருந்த 2 அறைகளும் இடிந்து சேதமானது. விபத்து தகவலறிந்த சிவகாசி தீயணைப்பு நிலைய அதிகாரி வெங்கடேசன் தலைமையில், தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று மற்ற அறைகளில் தீப்பிடிக்காத வகையில் தீயை கட்டுப்படுத்தி அணைத்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

பட்டாசு ஆலையில் தொழிலாளர்கள் யாரும் இல்லாததால் நல் வாய்ப்பாக பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது. விபத்து குறித்து சிவகாசி கிழக்கு காவல்நிலைய போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்