/* */

சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் விபத்து: பெரும் உயிர்ச்சேதம் தவிர்ப்பு

முன்னெச்சரிக்கையாக இருந்ததால் விபத்து நடந்த அறையில் இருந்து தொழிலாளர்கள் தப்பி ஓடி விட்டனர்

HIGHLIGHTS

சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் விபத்து: பெரும் உயிர்ச்சேதம் தவிர்ப்பு
X

செங்கமலப்பட்டி பகுதியில் இயங்கி வந்த பட்டாசு ஆலையில் தீ விபத்து:

சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் திடீர் வெடி விபத்து குறித்து போலீஸார் விசாரிக்கின்றனர்.

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகேயுள்ள திருத்தங்கல், பாண்டியன் நகர் பகுதியைச் சேர்ந்தவர் ராமலட்சுமி (40). இவருக்கு சொந்தமான ஸ்ரீநிதி பயர் ஒர்க்ஸ் என்ற பட்டாசு ஆலை, செங்கமலப்பட்டி பகுதியில் இயங்கி வருகிறது. இங்கு ராக்கெட், புஸ்வானம் மற்றும் பூச்சட்டி ரக பட்டாசுகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன.

பூச்சட்டி ரக பட்டாசுக்கு மருந்து செலுத்தும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்த போது எதிர்பாராத விதமாக திடீர் வெடி விபத்து ஏற்பட்டது. முன்னெச்சரிக்கையாக இருந்ததால் விபத்து நடந்த அறையில் இருந்து தொழிலாளர்கள் தப்பி ஓடி விட்டனர். சரியான நேரத்தில் தொழிலாளர்கள் அங்கிருந்து தப்பியதால் பெரும் உயிர்ச் சேதம் தவிர்க்கப்பட்டது.

விபத்து தகவலறிந்த சிவகாசி தீயணைப்பு நிலைய அதிகாரி வெங்கடேசன் தலைமையில், தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று, மற்ற அறைகளுக்கு பரவாமல் தடுத்தனர். நல் வாய்ப்பாக இந்த விபத்தில் யாருக்கும் காயம் எதுவும் ஏற்படவில்லை. விபத்து குறித்து சிவகாசி கிழக்கு காவல்நிலைய போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

Updated On: 24 March 2023 11:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அப்பாவுக்கான பிறந்தநாள் வாழ்த்துகள் :
  2. லைஃப்ஸ்டைல்
    சர்வாதிகாரி என்ற வார்த்தையை உச்சரித்தாலே நினைவில் வரும் ஹிட்லர்
  3. லைஃப்ஸ்டைல்
    உழைக்கும் தோழர்களுக்கு ஒரு சல்யூட்..!
  4. குமாரபாளையம்
    சர்வ சக்தி மாரியம்மன் திருவிழா
  5. லைஃப்ஸ்டைல்
    ஒருபோதும் தன்னை நிரூபிக்க வேண்டியதில்லை. அதன் இருப்பு போதும்! அது தான்...
  6. தமிழ்நாடு
    புதுச்சேரி தேசிய தொழில்நுட்பக்கழகத்தின் புதிய இயக்குநர் பொறுப்பேற்பு
  7. கல்வி
    சென்னை சிப்பெட் வழங்கும் 3 ஆண்டு டிப்ளமோ படிப்புகள்: மாணவர் சேர்க்கை...
  8. லைஃப்ஸ்டைல்
    கஷ்டம் வரும்போது சிரிங்க..! துன்பம் தூசியாகும்..!
  9. வீடியோ
    Adani துறைமுகத்துல போதைப்பொருள் இருந்துச்சு என்ன நடவடிக்கை எடுத்தாங்க...
  10. கல்வி
    +2 க்கு பிறகு அடுத்தது என்ன? சாதித்து காட்டுவோம்!