/* */

இந்து கோயில்களில் உள்ள நிலங்களில் ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும்

Encroachment on lands of Hindu temples should be removed

HIGHLIGHTS

இந்து கோயில்களில் உள்ள நிலங்களில் ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும்
X

விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூரில் நடைபெற்ற இந்து முன்னணி பொதுக்கூட்டத்தில் பேசுகிறார்,  மாநிலத்தலைவர் காடேஸ்வரசுப்பிரமணியன்

விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூரில் உள்ள ஸ்ரீஆண்டாள் கோவிலுக்கு, இந்து முன்னணி அமைப்பின் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் வருகை தந்து சுவாமி தரிசனம் செய்தார். பின்னர் வடக்கு ரதவீதியில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் அவர் பேசியதாவது:

இந்தியாவில் இந்துக்களுக்கு பாதுகாப்பில்லாத நிலையை ஏற்படுத்த சில அமைப்புகள் முயற்சி செய்கின்றன. வட மாநிலங்களை போல தமிழ்நாட்டிலும் சில பயங்கரவாதிகள் உள்ளனர். இங்கும் கலவரத்தை தூண்ட முயற்சிகள் செய்கின்றனர். அவர்கள் மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.இந்து அறநிலையத்துறை கோவில்களை விட்டு வெளியேற வேண்டும்.

திருவில்லிபுத்தூரில் புகழ்மிக்க ஆடிப்பூரத் தேரோட்டம் நடைபெற இருக்கின்றது. தேரோட்டத்திற்கு முன்னதாக தேரோடும் வீதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். தமிழகத்தில் உள்ள இந்து கோவில்களுக்கு சொந்தமான நிலங்கள் ஏராளமாக உள்ளன. ஆனால் அந்த நிலங்களை எல்லாம் ஆக்கிரமிப்பாளர்கள் அபகரித்துள்ளனர். ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து கோவில் நிலங்கள் முழுமையாக மீட்கப்பட வேண்டும் என்றார் அவர்.

Updated On: 3 July 2022 6:30 AM GMT

Related News

Latest News

  1. திருவண்ணாமலை
    மழை வேண்டி திருவாசகத்தை சுமந்தபடி கிரிவலம்
  2. கோவை மாநகர்
    திமுகவிற்கு எதிராக பேசியதால் போலீஸ் மூலம் பழிவாங்குகின்றனர்; சவுக்கு...
  3. லைஃப்ஸ்டைல்
    சகோதரிகள், இணை பிரியா தோழிகள்..!
  4. வானிலை
    தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளுக்கான தினசரி வானிலை...
  5. லைஃப்ஸ்டைல்
    உங்கள் அன்புக்குரியவர்களுக்கான திருமண வாழ்த்துகள்
  6. லைஃப்ஸ்டைல்
    எதை விதைத்தோமோ அதையே அறுவடை செய்வோம்..!
  7. மயிலாடுதுறை
    சிவனடியார்களிடம் மண்டியிட்டு மடிப்பிச்சை வாங்கி குழந்தை இல்லாத...
  8. கடலூர்
    வடலூர் வள்ளலார் சர்வதேச மையத்தில் தொல்லியல் துறையினர் ஆய்வு
  9. லைஃப்ஸ்டைல்
    ஆத்ம சாந்தி அடையட்டும்..! கண்ணீர் அஞ்சலி..!
  10. லைஃப்ஸ்டைல்
    திரும்பத் திரும்ப சொல்லப்படும் பொய் உண்மையாகிறது..!