சிவகாசியில் மழைக் காலத்தில் முன் எச்சரிக்கை பணிகள் துரிதப்படுத்தப்படும்

சிவகாசியில் மழைக் காலத்தில் முன் எச்சரிக்கை பணிகள் துரிதப்படுத்தப்படும்
X

சிவகாசியில், ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டம் இன்று நடைபெற்றது. 

அனைத்து ஊராட்சி பகுதிகளிலும் மழைக் காலத்தை முன்னிட்டு செய்ய வேண்டிய முக்கியப் பணிகள் குறித்து விவாதம் நடைபெற்றது.

சிவகாசி ஒன்றியப் பகுதிகளில், மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்படும் என ஒன்றியக்குழுவில் தீர்மானிக்கப்பட்டது.

விருதுநகர் மாவட்டம் சிவகாசியில், ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டம் இன்று நடைபெற்றது. ஒன்றிய அலுவலக கூட்டரங்கில், ஒன்றியப் பெருந்தலைவர் முத்துலட்சுமி தலைமையில் துணை தலைவர் விவேகன்ராஜ் முன்னிலையில் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில், சிவகாசி ஒன்றியத்தில் உள்ள அனைத்து ஊராட்சி பகுதிகளிலும் மழைக் காலத்தை முன்னிட்டு செய்ய வேண்டிய முக்கியப் பணிகள் குறித்து விவாதம் நடைபெற்றது.

மேலும் கழிவுநீர் கால்வாய்களை தூர்வாரும் பணிகள், மழைநீர் வடிகால்களை ஒழுங்குபடுத்துதல், மழைநீர் சேகரிப்பு பணிகள், கண்மாய்களை கண்காணித்தல், நோய் தடுப்பு முகாம்கள், காய்ச்சல் கண்டறியும் முகாம்கள், மருத்துவ முகாம்கள் உள்ளிட்ட நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது.

மேலும் ஒன்றியத்தின் அனைத்துப் பகுதிகளிலும் சாலைகளை சீரமைப்பது, சிறிய பாலங்களை சீரமைப்பது உள்ளிட்ட பணிகளை விரைந்து செய்திட வேண்டும் என்பது உள்ளிட்ட 31 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சீீனிவாசன், புகழேந்தி மற்றும் அதிகாரிகள், ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!