காரியாபட்டி அருகே ஊரணி தூர்வாரும் பணி: அதிகாரிகள் நேரில் ஆய்வு

காரியாபட்டி அருகே ஊரணி தூர்வாரும் பணி: அதிகாரிகள் நேரில் ஆய்வு
X

காரியாபட்டி அருகேயுள்ள ஊருணி தூர்வாரும் பணிகளை அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்தனர்

கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ், 82 லட்சம் மதிப்பில் சின்னக்குளம் ஊருணி தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருகிறது

காரியாபட்டி அருகேயுள்ள ஊருணி தூர்வாரும் பணிகளை அதிகாரிகள் நேரில் ஆய்வு மேற்கொண்டனர்.

விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி தாலுகா, மல்லாங்கிணறு பேரூராட்சி பகுதியில் உள்ள சின்னக்குளம் ஊருணியில் கழிவுநீர் கலந்து அசுத்தமாகி வருவதை உடனடியாக தடுத்து, ஊருணியை தூர்வார வேண்டும் என்று அந்தப்பகுதி மக்கள் அமைச்சர் தங்கம்தென்னரசுவிடம் கோரிக்கை வைத்தனர்.

இதைத்தொடர்ந்து, அமைச்சர் தங்கம்தென்னரசு உத்தரவின் பேரில், கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ், 82 லட்சம் ரூபாய் திட்ட மதிப்பீட்டில் சின்னக்குளம் ஊருணி தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருகிறது. ஊருணி தூர்வாரும் பணிகளை, மதுரை மண்டல பேரூராட்சிகளின் உதவி செயற்பொறியாளர் சுரேஷ்குமார், மல்லாங்கிணறு பேரூராட்சித் தலைவர் துளசிதாஸ், துணைத்தலைவர் மிக்கேலம்மாள், செயல் அலுவலர் அன்பழகன், இளநிலை பொறியாளர் கணேசன் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

Tags

Next Story