தமிழ் வளர்ச்சித்துறை விருது பெற்ற காரியாபட்டி நூலாசிரியருக்கு ஆட்சியர் பாராட்டு
காரியாபட்டி மண்ணின் பெருமை நூலாசிரியர் பரதனுக்கு மாவட்ட ஆட்சியர் வாழ்த்து
காரியாபட்டி மண்ணின் பெருமை நூலாசிரியர் பரதனுக்கு விருதுநகர் மாவட்ட ஆட்சியர் வாழ்த்து தெரிவித்தார்.
விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி, மனுநூல் நிலைய நிறுவனர் பரதன். இவர், தமிழக அரசு புள்ளியியல் துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றார். தனது ஓய்வுக்கு பிறகு, தன்னுடைய இல்லத்தை மனுநூல் நிலையம் என்ற பெயரில் நூலகம் நடத்தி வருகிறார். மேலும், நூலகம் சார்பாக, யோகா பயிற்சி, சிலம்பாட்டம், கேரம் பயிற்சி, இலவச தையல் பயிற்சி, தேவாரம் திருவாசகம் பாடல் பயிற்சி, ஏழை மாணவர்ககளுக்கு கல்வி உதவிதொகை வழங்கல்,
அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு தளவாடங்கள்,கல்வி. உபகரணங்கள் வழங்குதல் போன்ற சமூக பணிகளையும் செய்து வருகிறார். காரியாபட்டி வட்டாரத்தில், கிராமங்கள் எவ்வாறு உருவானது. கிராம பெயர்கள் வரக்காரணங்கள், வாழ்ந்து மறைந்த தியாகிகளில் வரலாறுகள் மண்ணின் தன்மை, விவசாய தொழில் வளர்ச்சி பற்றி விவரங்களை கிராம கிராமாக சென்று சேகரித்து காரியாபட்டி வட்டார மண்ணின் பெருமை என்ற நூலை எழுதினார்.
தமிழக அரசின் தமிழ் வளர்ச்சி துறை "காரியாபட்டி வட்டார மண்ணின் பெருமை" நூலை சிறந்த நூலாக தேர்வு செய்தது. இதற்கான விருதினை நூலாசிரியர் பரதனுக்கு தமிழ் வளர்ச்சி - தமிழ் பண்பாடு மற்றும் தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு விருது வழங்கி பாராட்டினார். விருது பெற்ற நூலாசிரியர் பரதனுக்கு, விருதுநகர் மாவட்ட ஆட்சியர் மேகநாதரெட்டி வாழ்த்து தெரிவித்தார்.
Tags
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu