சிவகாசியில் ஊராட்சி மன்றத் தலைவர்களுடன் மாவட்ட ஆட்சியர் கலந்துரையாடல்

சிவகாசியில் ஊராட்சி மன்றத் தலைவர்களுடன் மாவட்ட ஆட்சியர் கலந்துரையாடல்
X

சிவகாசியில், ஊராட்சி மன்றத் தலைவர்களுடனான கலந்துரையாடல் கூட்டத்தில்  பேசுகிறார் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன்.

பல்வேறு திட்டப்பணிகள் குறித்தும் அவற்றின் தற்போது நிலைமைகளை ஊராட்சித் தலைவர் களுடன் ஆட்சியர் ஜெயசீலன் ஆய்வு செய்தார்

சிவகாசியில், ஊராட்சி மன்ற தலைவர்களுடன் மாவட்ட ஆட்சியர் கலந்துரையாடல் கூட்டம் நடத்தி பல்வேறு திட்டப்பணிகள் குறித்தும் அவற்றின் தற்போது நிலைமைகளை ஆய்வு செய்தார்

விருதுநகர் மாவட்டம், சிவகாசி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஊராட்சி மன்ற தலைவர்கள், செயலர்கள் கலந்து கொண்ட கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. ஊராட்சி ஒன்றிய தலைவர் முத்துலட்சுமி தலைமை வகித்தார். மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் தண்டபாணி, ஊராட்சி ஒன்றிய துணைத்தலைவர் விவேகன்ராஜ், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ராமமூர்த்தி, ராஜ்மோகன் முன்னிலை வகித்தனர்.

சிவகாசி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள சித்துராஜபுரம், ஆனையூர், பள்ளபட்டி, விஸ்வநத்தம், நாரணாபுரம் உள்ளிட்ட 54 ஊராட்சி மன்ற தலைவர்கள், ஊராட்சி செயலர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் கலந்து கொண்டு பேசும்போது, கிராம பகுதிகளில் பொதுமக்கள் அதிகப்படியாக பயன்படுத்தும் திட்டங்களுக்கு முன்னுரிமை கொடுத்து செயல் படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். கிராமங்களில் செயல்படாமல் இருக்கும் கலையரங்குகளை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். மேலும் ஊராட்சி பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் பேசினார்.

நாரணாபுரம், பள்ளபட்டி ஊராட்சிகளின் சார்பாக, ஊராட்சியில் சேரும் குப்பைகளை கொட்டுவதற்கு கீழத்திருத்தங்கல் பகுதியில் இடம் ஒதுக்கி தர வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். ஊராட்சிகளின் அடிப்படை தேவைகளுக்கு முன்னுரிமை கொடுத்து அனைத்து பணிகளும் செய்து தரப்படும் என்று ஆட்சியர் ஜெயசீலன் கூறினார்.

Tags

Next Story
ai in future education