ஆடி அமாவாசையையொட்டி சிவகாசியில் கோயிலில் திரண்ட பக்தர்கள்

ஆடி அமாவாசையையொட்டி சிவகாசியில் கோயிலில் திரண்ட பக்தர்கள்
X

ஆடி அமாவாசையையொட்டி சிவகாசியில் கோயிலில்  பக்தர்கள் குவிந்தனர்.

ஆடி அமாவாசையையொட்டி சிவகாசியில் கோயிலில் திரண்ட பக்தர்கள் தங்களது முன்னோர்களுக்கு திதி கொடுத்தனர்.

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் பிரசித்திபெற்ற ஸ்ரீவிஸ்வநாதர் சுவாமி - ஸ்ரீவிசாலாட்சி அம்மன் வீற்றிருக்கும் சிவன் கோவிலில், ஆடி அமாவாசையை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் வருகை தந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

இன்று அதிகாலையில் ஸ்ரீவிஸ்வநாத சுவாமிக்கும், ஸ்ரீவிசாலாட்சி அம்மனுக்கும் சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றது. சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய சுவாமியை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

மேலும் முன்னோர்கள் ஆன்மா சாந்தி பெறுவதற்காக, சிவன் கோவில் வளாகத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் நெய் தீபங்கள் ஏற்றி சுவாமியை வணங்கி வருகின்றனர்.

Tags

Next Story
ai in future agriculture