சிவகாசி சிவன் ஆலயத்தில் பக்தர்கள் விளக்கு ஏற்றி வழிபாடு

சிவகாசி சிவன் ஆலயத்தில் பக்தர்கள் விளக்கு ஏற்றி வழிபாடு
X

சிவகாசி சிவன் கோவிலில் ஆயிரக்கணக்ககான பக்தர்கள், விளக்குகள் ஏற்றி வழிபாடு.

சிவகாசி ஸ்ரீவிஸ்வநாதர் சுவாமி - ஸ்ரீவிசாலாட்சி அம்மன் கோவிலில் பக்தர்கள் விளக்கேற்றி வழிபட்டனர்

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் உள்ள பிரசித்தி பெற்ற சிவன் கோவிலில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் விளக்குகள் ஏற்றி சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

இன்று புண்ணியமிக்க தை அமாவாசை தினத்தை முன்னிட்டு, முன்னோர்கள் ஆன்மா சாந்தியடைவதற்காக சிவன் கோவில்களில் விளக்குகள் ஏற்றி சுவாமி தரிசனம் செய்யும் வழக்கம் இருந்து வருகிறது. சிவகாசியில் உள்ள ஸ்ரீவிஸ்வநாதர் சுவாமி - ஸ்ரீவிசாலாட்சி அம்மன் வீற்றிருக்கும் சிவன் கோவிலில் இன்று தை அமாவாசையை முன்னிட்டு சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றது.

அதனை தொடர்ந்து ஸ்ரீவிஸ்வநாதர் சுவாமி - ஸ்ரீவிசாலாட்சி அம்மனுக்கு சிறப்பு அலங்காரங்கள் நடைபெற்று சிறப்பு அர்ச்சனைகள் நடத்தப்பட்டது. சிறப்பு பூஜைகளில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். மேலும் கோவில் வளாகத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள், தங்களது முன்னோர்கள் நினைவாக நெய் மற்றும் எண்ணெய் விளக்குகள் ஏற்றி மனமுருக பிரார்த்தனை செய்து சுவாமி தரிசனம் செய்தனர்.

நிகழாண்டின் தை அமாவாசை சிறப்புகள்...

தை அமாவாசை சனிக்கிழமை (ஜன.21 ) வருவது சிறப்பானதாகக் கருதப்படுகிறது. சனி அமாவாசை தினத்தின் போது கருப்பு உளுந்து, கருப்பு எள், வெல்லம், புதிய ஆடைகள் ஆகியவற்றை நாம் தானம் அளித்தால் மிகவும் நல்லது. இதனால் நம் முன்னோர்களின் ஆசி கிடைக்கும் என சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ளது.

சனி அமாவாசை தினத்தில் ஏழை எளியோரை ஒருபோதும் நாம் தொந்தரவு அல்லது கஷ்டப்படுத்தக் கூடாது. ஏழை மக்களின் உருவில் சனி பகவான் இருக்கிறார். அவர்களை அவமதித்தால் சனி பகவானின் கோபத்திற்கு ஆளாக நேரிடும். ஏழை மக்களுக்கு உதவி செய்வதன் மூலமும் அவர்களுக்கு மரியாதை அளிப்பதன் மூலமும் சனி பகவானின் ஆசியை பெறலாம்.

நம்முடன் வாழ்ந்து மறைந்த முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க ஆடி அமாவாசை, புரட்டாசி மாதம் வரும் மகாளய அமாவாசை, தை அமாவாசை போன்றவை சிறப்பு வாய்ந்த நாட்களாகும். நம்முடைய பித்ருகளுக்கு தர்ப்பணம் பூஜை செய்யாதவர்கள் முன்னோர்களின் சாபத்திற்கு ஆளாகின்றனர். அப்படி சாபம் பெற்றவர்களின் வீடுகளில் தான் ஊனமுற்ற குழந்தைகள் பிறக்கிறது என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன. எனவே வரும் தை அமாவாசை நாளில் நாம் மறக்காமல் தர்ப்பணம் அளிக்க வேண்டும்.

பித்ரு லோகத்தில் உள்ள நமது முன்னோர்கள் தட்சிணாயண புண்ணிய காலமான ஆடி அமாவாசை நாளில் பூவுலகத்திற்கு வந்து புரட்டாசி மாதத்தில் மகாளாய பட்ச காலத்தில் நம்முடனே இருந்து உத்தராயாண புண்ணிய காலமான தை மாதத்தில் வரும் அமாவாசை நாளில் நம்மை ஆசிர்வதித்து மீண்டும் பிதுர் லோகத்திற்கு திரும்பி செல்வதாக ஐதீகம். தை அமாவாசை தினத்தில் மறைந்த முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தால், அவர்களின் அருளாசியால் எண்ணற்ற நன்மைகள் ஏற்படும்.

இந்த நாளில் முன்னோர்களை நினைத்து வணங்கி அவர்களுக்கு திதி கொடுக்கலாம். இதன்மூலம் நமது முன்னோர்களின் ஆசி கிடைக்கும். தை அமாவாசையில் முன்னோருக்கு உணவு, புத்தாடை படைத்து வழிபட்டு விட்டு, அவற்றை ஏழை எளியவர்களுக்கு தானமாக வழங்கினால் நன்மைகள் பல வந்து சேரும்

அமாவாசையன்று தீர்த்தக்கரைகளில் நீராடும் போது, பிதுர்காரகராகிய சூரியனுக்கு இரு கைகளாலும் நீர் விடும் அர்க்கியம் செய்வது மிகுந்த நன்மை தரும். கடல் அல்லது புண்ணிய நதிகளில் நீராடியவுடன் முழங்கால் அளவு நீரில் நின்றுகொண்டு, சூரியனை நோக்கி மூன்று முறை அர்க்கியம் செய்வதன் மூலம் சூரியனின் அருளையும் பூரணமாக பெறலாம். முன்னோர்களுக்கு மூன்று கை தண்ணீர் என்று சொல்வார்கள். அவர்களுக்கு செய்யும் தர்ப்பண பலன்களை நம்மிடம் இருந்து பெற்று பிதுர் தேவதைகளிடம் சூரியன் வழங்குகிறார். அந்த தேவதைகள் மறைந்த முன்னோரிடம் பலன்களை சேர்க்கின்றன என்பது ஐதீகம்.


Tags

Next Story
இது தெரியாம போச்சே ,காலை எழுந்து வெந்நீர் பருகுவதால் இவ்வளவு நன்மைகள் இருக்கா